பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பாரி''' [[பறம்புமலையை]] ஆட்சி செய்த மன்னன். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். இவர் குறுநிலமன்னர்களில் ஒருவர் ஆவார். பாரி வேளிர்குலத்தைச் சார்ந்தவர்; எனவே, இவரை 'வேள்பாரி' என்றும் அழைப்பர். பாரி பறம்பு மலையையும் அதனைச்சூழ்ந்த நாட்டையும் ஆண்டவர். இந்தப் பறம்புநாடு முந்நூறு(300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை இக்காலத்தில் 'பிரான்மலை' என்று வழங்குகின்றது. அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும். இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு. பிறான்மலை [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] [[திருப்பத்தூர்]], [[காரைக்குடி]] அருகில் உள்ளது. பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
இவர் [[கடையேழு வள்ளல்|கடையேழு வள்ளல்களில்]] ஒருவராக சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்.
 
இவர் [[கடையெழு வள்ளல்கள்|கடையேழு வள்ளல்களில்]] ஒருவராக சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் [[கபிலர்]] பாரியின் நண்பர். [[திருச்சி]]யிலிருந்து [[மதுரை]] செல்லும்வழியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது [[திருவாதவூர்]]. அவ்வூரில் பிறந்தவர் [[கபிலர்]] எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர்.இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.
 
பாரி தமிழ்வேந்தர் மூவராலும் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். பாரிக்கு இருமகளிர் உண்டு.[[அங்கவை சங்கவை]] ஆகியோர் இவரது மகள்கள் ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/பாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது