2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
 
==பின்புலம்==
ஜூலை 14, 2002ல் பன்னிரெண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1992-97ல் குடியரசுத் தலைவராக இருந்த [[கே. ஆர். நாராயணன்]] ஆரம்பத்தில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெருவித்தார். [[இந்திய தேசிய காங்கிரசு]] முதலான எதிர்கட்சிகள் அவருக்கு ஆதரவளித்தன. ஆனால் ஆளும் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணி]] இதற்கு இசையவில்லை. [[பாரதிய ஜனதா கட்சி]] மற்றும் பிரதமர் [[அடல் பிகாரி வாச்பாய்]]க்கும் நாராயணனுக்கும் இடையே அவ்வளவு இணக்கமான உறவு இல்லாமையே இதற்குக் காரணம். எனவே நாராயணனை மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக்க பாஜக கூட்டணி மறுத்துவிட்டது. ஆனால் அவர் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டால் [[இந்திய வாக்காளர் குழு|வாக்காளர் குழு]]வில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது தெளிவாக இல்லாத நிலையில் தோல்வியடய தெ.ஜ கூட்டணி விரும்பவில்லை. எனவே எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஒரு பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் இறங்கியது. துணைக் குடியரசுத் தலைவர் [[கிருஷண் காந்த்]], முன்னாள் [[மகாராஷ்டிரா]] ஆளுனர் [[பி. சி. அலெக்சாந்தர்]] ஆகியோரது பெயர்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இவர்கள் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத் தக்கவர்களாக அமையவில்லை. இறுதியில் முன்னாள் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகரும், இந்தியாவின் “ஏவுகணை மனிதர்” என்று அறியப்பட்ட [[அப்துல் கலாம்]] தே.ஜ கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரசும் இத்தெரிவுக்கு இசைந்தது. ஆனால் [[சிபிஐ]], [[சிபிஎம்]] முதலான [[இடது முன்னணி (இந்தியா)|இடதுசாரிக் கட்சிகள்]] அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை எதிர்த்து [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தின்]] தளபதிகளில் ஒருவரான கேப்டன் [[லட்சுமி சாகல்|லட்சுமி சாகலை]] வேட்பாளராக்கினர். தேர்தலில் கலாம் எளிதில் வென்று குடியரசுத் தலைவரானார்.
 
==முடிவுகள்==