சிலந்தி சங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''சிலந்தி சங்கு'' ராமேசுவரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 5:
மாங்குரோஸ் எனப்படும் சதுப்பு நில காடுகளிலும்,பவளப்பாறைகள் அதிகமாகவுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டலக் கடல்களில் அதிகமாக வாழ்ந்தாலும் தீவுப்பகுதிகளின் கரையோரங்களில் சுமார் 5 மீட்டர் ஆழத்திலும் கூட இவை வசிக்கின்றன. கடலில் உள்ள பாசி வகைகளில் ஒரு வகையான சிவப்பு நிற பாசிகளைத் தின்று உயிர் வாழும் இவ்வினங்கள் ஆழம் குறைவான இடங்களில் வசிக்கின்றன.குறைந்தபட்சம் 18 செ.மீ.முதல் 29 செ.மீ.நீளம் வரை இது வளரும். அதிக கனமுடையதாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும் இந்தச் சங்கின் பின்புறம் இயற்கையாகவே மிகவும் பளபளப்பாக இருக்கும்.இச்சங்கின் மேற்புற ஓடு வெள்ளை நிறத்திலும் பழுப்பு நிற புள்ளிகளை உடையதாகவும் இருக்கும். இச்சங்கிலுள்ள திடமான கால் பாதத்தின் உதவியால் கனமான அந்த ஓட்டைத் தூக்கிக் கொண்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து இரை தேடிக் கொள்கின்றன.
==பயன்பாடு==
இதனுள்ளே இருக்கும் பூச்சி போன்ற உயிரினம் சுவை மிகுந்த இறைச்சியாகவும் மீனவ மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதன் இறைச்சியை எடுத்த பிறகு சுத்தப்படுத்தப்பட்டு மேலும் பளபளப்பாக்கி அலங்காரப் பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வினம் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால் வேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி_சங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது