மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கதை: விமர்சனமகற்றல்
வரிசை 22:
{{கதைச்சுருக்கம்}}
'''மீனாக்சி ஜயர்''' ([[கொங்கொன சென் சர்மா]]) தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.மீனாக்சி தனது 9 மாத பிள்ளையுடன் பேருந்தில் நண்பரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் '''ராஜா சௌத்ரி''' ([[ராகுல் போஸ்]]) எனும் இஸ்லாமிய இளைஞரைச் சந்திக்கின்றார்.ஆரம்பத்தில் அவர் ஒரு இந்துவென நினைத்துப் பழகும் பின்னர் ஒரு இஸ்லாமியர் எனத் தெரிந்து அவரிடம் இருந்து விலகியே இருக்கவும் காணப்பட்டார்.அவர்கள் பயணம் செய்யும் பேருந்து திடீரென வரும் இந்துக் கும்பலால் தடுத்து நிறுத்தப்படுகின்றது.இஸ்லாமியர்களாக உள்ள அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறிக்கொள்ளும் அக்கும்பல் இஸ்லாமிய மதத்தவர்களை அழைக்கும் போது அங்கு தன்னுடன் இருந்த ராஜாவைக் மனிதாபிமான அடிப்படையில் காட்டிக் கொடுக்க மறுக்கின்றார் மீனாக்சி அதே வேளை அக்கும்பல் அங்கு இஸ்லாமியர்களாக இருந்த முதியவர்களை வெளியே வலுக்கட்டாயமாஹ அழைத்துச் செல்கின்றது.சிறிது நேரங்களின் அருகில் இருக்கும் ஊருக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த விடுதியொன்றில் தங்குகின்றனர்.பின்னர் அங்கு வரும் பலர் கேட்கும் போதெல்லாம் ராஜா தனது கணவர் என அவரைக் காப்பாற்றுவதற்காக கூறிக்கொள்ளும் மீனாக்சி.இறுதியில் அவரை காப்பாற்றி பின்னர் புகையிரத நிலையத்திலிருந்து பிரிந்து செல்கின்றார்.
 
இயக்குனர் இந்த திரை படத்தை மெதுவாக நகர்த்தி சென்று இருக்கிறார். சில காட்சிகள்
அழகான கவிதை போல செதுக்கப் பட்டுள்ளது. தமிழ் வேதியர் குடும்பத்தில்
பிறந்த நாயகி - பழைய சம்பிரதாயங்களை முழுமையாக பின்பற்றும் பெண்ணாக
காட்டப் படுகிறார். ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில்
வேறு வழி இல்லாமல் இருவரும் ஒரே இடத்தில் தங்க நேர்கிறது. அந்த சூழ்நிலையிலும்
நாயகி ஒரு அந்நியனை நம்பி வந்து இருக்க கூடாது என நாயகன் காதில் விழ
புலம்புவதும் - வாழ்வின் பெரும் பகுதியை கானகத்தில் கழிக்கும் புகைப்பட கலைஞரான
நாயகன் கோபமுற்று இது இருபதாம் நூற்றாண்டு . நீ முதுகலை இயற்பியல் படித்ததில் என்ன புண்ணியம் "
என கூறிவிட்டு இரவு பொழுதை கானகத்தில் கழிப்பதும் - பிறகு தன் தவறை உணர்ந்த நாயகி மறுநாள்
இரவில் நடக்கும் ஒரு கொலையினை பார்த்து மிரண்டு - " கொலை இவ்வளவு எளிதானதா ? " என
துவள, நாயகன் ராஜா, அவளை மெல்ல தேற்றுகிறார். அதிலிருந்து தான் போட்டு வைத்திருந்த
வேலிகளை அகற்றி விட்டு ராஜாவுடன் நட்போடு பழகுகிறாள். ஒருவழியாக எல்லா பிரச்சினைகளும்
தீர்ந்து அவர்கள் இரயிலில் பயணிக்கும் போது, இருவரும் தங்கள் மதம் , மொழி , இனம் மறந்து
அவர்களுக்குள் துளிர்த்த ஒரு வித ஈர்ப்பை அடையாளம் காண்கின்றனர். நாயகி மீனாட்சி ஏற்கனவே
மணமானவர் என்றாலும் , தன்னை அன்பாக கவனித்து கொண்ட, உற்ற நேரத்தில் பாதுகாப்பாக
இருந்த ராஜா மீது இனம் புரியாத நேசம் கொள்கிறார். அவர்களுக்குள் நடக்கும் அந்த மௌன போராட்டம்
அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இரயில் நிலையத்தில் தயாராக நிற்கும் மீனாட்சியின் கணவனிடம்
அவளை பத்திரமாக ஒப்படைக்கும் போது , நாயகி துணிச்சலாக ராஜா ஒரு முஸ்லிம் என்பதை
தைரியமாக கணவனிடம் சொல்வது , அவளுடைய பழமை தனம் போய்விட்ட தெளிந்த நிலையை
காட்டுகிறது.
ஒரு பேருந்தில் அந்நியர்களாக அறிமுகமாகி , சந்தர்பத்தாலும் பாதுகாப்பிற்காகவும்
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயராக நேர்ந்து , பிறகு இரயிலில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்
ஐயராகவே தங்களை உணர்ந்து, உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் பலியாகி
அழகாய் பிரிந்து செல்கின்றனர் திரையிலிருந்து மட்டும்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மிஸ்டர்_அண்ட்_மிஸ்ஸிஸ்_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது