வேடுவர் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சி இலங்கையின் ஆதிவாசிகள், இலங்கை வேடர்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இலங்கையின் வேடர்கள்''' ([[சிங்களம்]]: "වැද්දා") என்போர் [[இலங்கை]] காடுகளின் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் [[இலங்கை பழங்குடி மக்கள்|பழங்குடி]] மக்களும் ஆவர்.
 
இலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடர்கள் என அழைக்கப்பட்டாலும், அன்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடர்களாக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகளும் உள்ளன.
 
==பிராமதாசா ஆட்சி==
இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான [[ரணசிங்க பிரேமதாசா]]வின் ஆட்சியின் போது பெருமளவான வேடர்களை சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார்.
 
==பேசும் மொழி==
தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களே. வெளியார் இவர்களை [[வேடர்]] என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (''Wanniyala-Aetto'') எனவே குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான [[சிங்களவர்]], [[தமிழர்]], [[முஸ்லீம்கள்]] ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் [[தமிழ்]] பேசுகின்றார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/வேடுவர்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது