மகா வீர சக்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
'''மகா வீர சக்கரம் ''' (Maha Vir Chakra, MVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய [[இந்தியா|இந்தியப்]] [[படைத்துறை|படைவீரர்களுக்கான]] [[இந்தியப் படைத்துறை|இந்தியப் படைத்துறையின்]] இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். [[இந்தி]] மொழியில் '''மகாவீர்''' என்பது தமிழில் '''பெரும் வீரர்''' என்ற பொருளில் வழங்கும்.
==விருதின் தோற்றம்==
விருது பதக்கம் தரமான [[வெள்ளி]]யில் வட்டவடிவில் அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து முனை முத்திரை நட்சத்திரத்தின் நடுவில் வட்டமான தங்கமுலாமிட்ட அரசு [[இலச்சினை]] இருக்குமாறு புடைச்செதுக்கப் பட்டுள்ளது. பதக்கத்தின் பின்புறம் நடுவில் இரு [[தாமரை]] மலர்களுடன் [[தேவநாகரி]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில] எழுத்துருக்களில் "மகா வீர சக்கரா" என்று புடைச் செதுக்கப்பட்டுள்ளது. வீரரின்இந்த விருது படைவீரரின் இடது [[மார்பு|மார்பில்]] 3.2 செ.மீ அகலமுள்ள அரை [[வெள்ளை]] அரை [[செம்மஞ்சள்]] வண்ண நாடாவுடன், செம்மஞ்சள் வண்ணம் இடது [[தோள்|தோளிற்கு]] அண்மையில் இருக்குமாறு குத்தப்படுகிறது.<ref>http://www.india9.com/i9show/Mahavir-Chakra-27619.htm</ref>
 
விருது பெற்றோர் தங்கள் பெயரின் விகுதியில் எம்.வி.சி என்று போட்டுக் கொள்ளலாம்.
 
==வரலாறு==
இதுவரை 155க்கும் மேற்பட்ட வீரச்செயல்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளனர். ஒரே போரில் மிக கூடுதலான மகாவீரப் பதக்கங்கள் [[1971]]ஆம் ஆண்டில் நடந்த [[இந்திய பாக்கித்தான போர், 1971|இந்தியப் பாக்கித்தான் போரில்]] வழங்கப்பட்டன; அப்போது பதினோரு விருதுகள் [[இந்திய வான்படை]]க்கு வழங்கபட்டது.
 
மகா வீர சக்கரம் பெற்றவர்களுக்கு இரண்டாம் முறையாகப் பெறுபவர்களுக்கு [[ஆடைப்பட்டயம்]] வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பெயர் விகுதியில் MVC(Bar) என்று போட்டுக்கொள்ளலாம். 1965ஆம் ஆண்டு முதன்முறையாக இவ்விதியின்படி இருவருக்கு வழங்கப்பட்டது. இந்நாள்வரை ஆறுமுறை முதல் ஆடைப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது: விங் கமாண்டர் ஜக்மோகன் நாத் (1962 & 1 செப்டம்பர் 1965), மேஜர் ஜெனரல் ராஜிந்தர் சிங் (19 மார்ச்சு 1948 & 6 செப்டம்பர் 1965), [[அருண் ஸ்ரீதர் வைத்யா]] (16 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971), விங் கமாண்டர் பத்மநாப கௌதம் (6 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971 (மறைவிற்குப்பின்னர்)), கர்னல் செவாங் ரின்ச்சென் (சூலை 1948 & 8 திசம்பர் 1971), மற்றும் பிரிகேடியர் சான்ட் சிங் (2 நவம்பர் 1965 & சனவரி 1972). இரண்டாம் ஆடைப்பட்டயங்கள் வழங்கப்பட்டவரில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மகா_வீர_சக்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது