பால கங்காதர திலகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ja:バール・ガンガーダル・ティラク
சி தானியங்கிமாற்றல்: sa:बालगङ्गधरतिलकः; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
|name= லோகமான்ய பால கங்காதர திலகர்
|lived={{death date and age|1920|08|01|1856|07|23|df=yes}}
|image=[[Imageபடிமம்:Bal Gangadhar Tilak.jpg|150px|upright]]
|caption= திலகரின் நிழற்படம்
|alternate name=லோகமான்ய திலகர்
வரிசை 11:
}}
 
'''பால கங்காதர திலகர்''' (''Bal Gangadhar Tilak'', {{lang-mr|बाळ गंगाधर टिळक}} {{lang-hi|लोकमान्य बाल गंगाधर तिलक}}) {{birth date|1856|07|23|df=yes}}–{{death date and age|1920|08|1|1856|07|23|df=yes}}, ஒரு இந்தியத் [[தேசியவாதி]]யும், [[சமூக சீர்திருத்தவாதி]]யும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். ''தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன்'' என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது.
 
== இளமைக்காலம் ==
திலக், இந்தியாவின் மகாராட்டிரத்தின் ரத்தினகிரியில் உள்ள "மதாலி அலீயில்" பிறந்தார். [[நடுத்தர வகுப்பு|நடுத்தர வகுப்பைச்]] சேர்ந்த மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், 1877 ஆம் ஆண்டில் [[பூனா]]வில் உள்ள [[டெக்கன் கல்லூரி]]யில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். முதலில் பூனாவில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் [[கணிதம்|கணித]] ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திலக் பின்னர் ஒரு [[பத்திரிகையாளர்]] ஆனார். இவர் மேனாட்டுக் கல்வி முறையைக் கடுமையாகச் சாடி வந்தார். அம் முறை இந்தியப் பண்பாட்டை அவமதித்ததாக அவர் கருதினார். இவர் இந்திய இளைஞர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காகத் [[தக்காணக் கல்விச் சபை]]யை நிறுவினார். இவர் பெர்கூசன் கல்லூரியில் கணிதமும் கற்பித்து வந்தார்.
 
== அரசியல் வாழ்வு ==
பாலகங்காதர திலகர் அவர் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற, கணிதப் பாடத்தில் மிகச் சிறப்பாக முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன். அவன் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில விண்ணப்பித்தான். அவனுடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும் பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவும், " அன்பு மாணவனே! நீ கணிதத்தில் மிகவும் திறமை பெற்றிருப்பது தெரிகின்றது. நீ கணிதப் பிரிவில் சேர்ந்து கணிதத்தையே சிறப்புப் பாடமாகக் கற்பாயாகில், நீ மிகவும் மேலாம் நிலையினை அடைவாய். அதன் மூலம் உனக்கு ஒளிமிகுந்த எதிர் காலம் அமையும். அதற்கு மாறாக நீ சட்டம் படிப்பாயானால் நீ அடையும் பயன் குறைவாகவே இருக்கும். நீ யோசித்து உன்முடிவைச் சொல்" என்று அவனுக்கு விளக்கிக்கூறினர். அதற்கு மாணவன் பணிவோடு" ஐயன்மீர்! தாங்கள் கூறிய அனைத்தும் சரிதான். ஆனால், என் நாடு அடிமைப்பட்டுக் துன்புற்றுக் கிடக்கின்றது. சுதந்திர தாகத்தால் தவிக்கும் என் மக்கள் அன்னிய ஆதிக்கத் தால் சட்டமல்லாத சட்டத்தின் கீழ் அடிக்கடி கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வாடு கின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவிக் கத் தக்கவர்களான தேச பக்தி மிகுந்த வழக்குறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. என் மக்களையும், தேசத்தையும் காப்பாற்றவேண்டுமானால் நான் சட்ட நுணுக்கங்களையெல்லாம் கற்ற சட்ட நிபுணனாகவேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகவே நான் சட்டம் பயில வந்தேன். அதற்கு, பெரியீர் தாங்கள் தாம் என்மீது அன்பும், கருணையும் கொண்டு உதவிகளச் செய்யவேண்ண்டும்."என்று பணிவுடன் கூறினான். அவன் கொண்ட வைராக்கியத்தின்படியே சட்ட வல்லுனனாகிப் பல தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களைச் சிறை யிலிருந்து மீட்டான். தன் நாட்டு மக்கள் மனத்தில் சுதந்திரக் கனலை மூண்டெரியச் செய்தான் <ref>[http://groups.google.nr/group/muththamiz/msg/0592eb8e57521e60 பாலகங்காதர திலகர்]</ref>.
=== பத்திரிகை ===
திலகர், கோபால் கணேசு அகர்கர், விட்ணுசாத்திரி சிப்லுனாக்கர், இன்னும் பிற நண்பர்களுடன் சேர்ந்து 1881 ஆம் ஆண்டில் இரண்டு பத்திரிகைகளைத் தொடக்கினார். ஒன்று "கேசரி" என்னும் பெயர் கொண்ட [[மராத்தி]] மொழிப் [[பத்திரிகை]], மற்றது "மராட்டா" என்ற ஆங்கிலப் பத்திரிகை. இரண்டு ஆண்டுகளிலேயே "கேசரி" இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கொண்ட பத்திரிகை ஆனது. இதன் ஆசிரியத் தலையங்கங்கள் பிரித்தானியர்களின் கீழ் மக்கள்படும் துன்பங்கள் குறித்ததாகவே இருந்தன. இந்தப் பத்திரிகைகள், ஒவ்வொரு இந்தியனையும் தமது [[உரிமை]]களுக்காகப் போராடும்படி தூண்டின.
 
== இதையும் பார்க்க‌ ==
* [[தேசபக்தி]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://groups.google.nr/group/muththamiz/msg/0592eb8e57521e60 பாலகங்காதர திலகர்]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
வரி 34 ⟶ 35:
[[பகுப்பு:1920 இறப்புகள்]]
[[பகுப்பு:1856 பிறப்புகள்]]
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
[[bn:বাল গঙ্গাধর তিলক]]
வரி 53 ⟶ 52:
[[pt:Bal Gangadhar Tilak]]
[[ru:Тилак, Бал Гангадхар]]
[[sa:बालगङ्गधरतिलकः]]
[[sa:बाल गङ्गाधर तिलक]]
[[sv:Lokmanya Tilak]]
[[te:బాలగంగాధర తిలక్]]
"https://ta.wikipedia.org/wiki/பால_கங்காதர_திலகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது