சூனியக்காரிகள் வேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "மனித உரிமை மீறல்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''சூனியக்காரிகளுக்கான வேட்டை''' என்பது சூனியக்காரிகளையோ (அதாவது மாயமந்திரம் தெரிந்தவர் என்று அஞ்சப்படும் பெண்களை) அல்லது செய்வினைக்கான சான்றுகளையோ தேடி நடத்தப்படும் வேட்டையாகும். இது பெரும்பாலும், திகில், "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" அனைத்த மனப்பாங்கு, நினைத்தவாக்கில் பிறரை சாடல் முதலிய மனிதனின் அடிப்படை பண்புகள் போலவே தோற்றினாலும், பிற்காலங்களில் இது அரசினரின் உடன்பாட்டுடன் சட்டரீதியாகவும் நடந்தேறியதுண்டு. 1480 - 1750 க்கு இடைப்பட்ட காலத்திலேயே ஐரோப்பாவிலும்[[ஐரோப்பா]]விலும், [[வட அமெரிக்காவிலும்அமெரிக்கா]]விலும் இவ்வாறு நாற்பதாயிரம் தொடங்கி நூறாயிரத்துக்கு இடைப்பட்டோர் செய்வினை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இறப்பு ஒறுப்பும் வழங்கப்பட்டனர். இதுவே முப்பதாண்டுச்முப்பதாண்டுப் சண்டைக்கும்போருக்கும், சீர்திருத்தத்திற்கும் உந்துதலாகவும் ஆயிற்று.
 
பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் இறுதி செய்வினை விசாரணை நிகழ்ந்தேறியது. 1735 இன் செய்வினை பற்றிய சட்டம் (Witchcraft Act) மூலம் இத்தகைய செய்கைகள் இனிமேலும் குற்றமாகாது என்று பெரிய பிரித்தானியாவில் சட்டமூலமாக்கப்பட்டது. செருமனியில் 18ம் நூற்றாண்டு வரை இவ்வழக்கம் தொடர்ந்த போதும் பின் ஒழிந்துவிட்டது. செய்வினை செய்வோரைத் தேடும் வேட்டைகள் தற்காலத்தில் சகாரா பாலைவனத்தின் தெற்காயுள்ள பகுதிகளிலும், இந்தியாவிலும், பாப்புவா நியூகினியாவில் இருந்தும் வரும் செய்திகளில் காணப்படுகின்றன. சவூதி அரேபியாவிலும், கமெருனிலும் இதற்கெதிரான சட்டமியற்றப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சூனியக்காரிகள்_வேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது