இந்திய அரசுச் சட்டம், 1935: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 1935 இந்திய அரசுச் சட்டம், இந்திய அரசுச் சட்டம், 1935 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''இந்திய அரசுச் சட்டம், 1935''' (''Government of India Act 1935'') என்பது [[பிரித்தானிய இந்தியா]]வில் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இதன் மூலம் [[இந்திய அரசுச் சட்டம், 1919 |இரட்டை ஆட்சி முறை]] ஒழிக்கப்பட்டு இந்தியர்களுக்கு மேலதிக தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட்டன.
 
இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி பிரித்தானிய இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பத்து ஆண்டுகள் கழித்து இவ்வாட்சி முறையினை ஆய்வு செய்த [[சைமன் குழு]] இந்தியர்களுக்கு மேலும் பல ஆட்சி உரிமைகளை அளிக்கப் பரிந்துரை செய்தது. 1931-32ல் இது குறித்து பிரித்தானிய அரசுக்கும் இந்தியர்களுக்கும் இடையே [[இந்திய வட்டமேசை மாநாடுகள்|வட்ட மேசை மாநாடுகள்]] நடைபெற்றன. இம்மாநாடுகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லையென்றாலும், பிரித்தானிய அரசு, அடுத்த கட்ட சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் பலனாக 1935 அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:
 
*இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தியர்களின் தன்னாட்சி உரிமைகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி அங்கீகாரம்]] தரப்படவில்லை
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசுச்_சட்டம்,_1935" இலிருந்து மீள்விக்கப்பட்டது