"மக்புல் ஃபிதா உசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==சர்ச்சைகள்==
[[சரசுவதி]], [[லட்சுமி]], [[சிவன்]], வீர [[அனுமன்]], [[சீதை]] போன்ற [[இந்துக் கடவுள்கள் | இந்துக் கடவுள்களை]] உசைன் [[நிர்வாணம் | நிர்வாணக்]] கோலத்தில் வரைந்ததும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரத மாதா கற்பழிக்கப் பட்டது போன்று வரைந்தது (Rape Of India) பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்துக் கடவுள்களை மட்டும் உசைன் அவமதிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் வண்ணம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
 
இந்து சமய நம்பிக்கைகளை அவதூறு செய்தார் எனவும், இரு வேறு சமயத்தவரிடையே பகையுணர்வைத் தூண்டினார் எனவும் உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன; பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. உசைன் வீட்டின் மீது [[இந்துத்துவா|இந்துத்துவ]] அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சர்ச்சைகளாலும், கொலை மிரட்டல்களாலும் 2006ல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் [[துபாய்]] நகரில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு [[கத்தார்]] நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.
 
==மேற்கோள்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/788274" இருந்து மீள்விக்கப்பட்டது