"இந்தியக் கடலோரக் காவல்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.2) (தானியங்கிமாற்றல்: it:Guardia costiera dell'India; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கிஇணைப்பு: mr:भारतीय तटरक्षक)
சி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: it:Guardia costiera dell'India; மேலோட்டமான மாற்றங்கள்)
 
 
== வரலாறு ==
 
இந்தியாவின் படை சாராத கடல்வளங்களை பாதுகாக்க கடலோர காவல்படையை உருவாக்க வேண்டுமென [[இந்தியக் கடற்படை]] முன்மொழிந்தது. 1960ம் ஆண்டுகளில் கடல் வழியே பல கடத்தல் பொருட்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வந்தன இவை உள்நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் என சுங்கத்துறை அஞ்சியது. இவற்றை தடுக்க சுங்கத்துறை கடற்படையின் உதவியை அடிக்கடி நாடியது, கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி கடத்தல் படகுகளை வழிமறிக்க வேண்டியது. 1971ம் ஆண்டு இந்த சிக்கலை பற்றி ஆராய நாக் சவுத்திரி ஆணையம் உருவாக்கப்பட்டது, இதில் கடற்படையும் வான்படையும் பங்குபெற்றன.
1971ல் இந்த ஆணையம் இந்தியாவின் நீண்ட கடற்கரையை ரோந்து சுற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மீன் பிடி படகுகளை பதிவு செய்யவேண்டும் என்றும் சட்ட விரோத படகுகளை வழிமறிக்க அனைத்து வசதிகளையும் உடைய படை அணியை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மேலும் கருவிகளின் தன்மை, அவற்றின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு, பணி செய்ய தேவையான ஆட்கள் போன்றவற்றை பரிந்துரைத்தது.
 
1973ல் இந்தியா புதிய படையணிக்கு கருவிகளை கொள்வன செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்திய கடற்படையில் இருந்து ஆட்களை தற்காலிக அடிப்படையில் பெற்றது. தன் ஆட்கள் முதன்மை பணியை விட்டு விலகி வேலை செய்வதனால் தன் நோக்கம் பாதிப்படையும் என்று கடற்படை கருதியது. இதைத்தொடர்ந்து கடற்படை தலைமை அதிகாரி பாதுக்காப்பு துறை செயலுருக்கு கடிதம் எழுதினார். அதை பெற்றுக்கொண்ட பாதுகாப்பு துறை செயலர் அமைச்சரவை செயலுருக்கு ஆகத்து 31, 1974 ல் கடிதம் எழுதி கடலோர காவல்படை அவசியம் என வழியுறுத்தினார்.
 
1974 செப்டம்பர் மாதம் ருசுடமஜி ஆணையம் அமைக்கப்பட்டது. இது பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் கடற்படை மற்றும் காவல் துறைகளின் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை ஆராய்ந்தது. பாம்பே ஹை யில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் காரணமாக கடல்சார்ந்த சட்ட நடைமுறைபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றும் தனி அமைப்பு உருவாவதன் அவசியம் அதிகரித்தது. இந்த ஆணையம் தன் பரிந்துரையாக கடலோர காவல் படை பாதுகாப்பு துறையின் கீழ் உருவாக்கப்படவேண்டும் என்று 1975 சூலை தெரிவித்தது. ஆனால் அமைச்சரவை செயலாளர் உள்துறையின் கீழ் கடலோர காவல்படை உருவாக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தார்.
அதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்து பாதுகாப்பு துறையின் கீழ் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
 
1977 பிப்ரவரி 1, அன்று கடலோர காவல்படை கடற்படையிடம் இருந்து பெறப்பட்ட 5 ரோந்து படகுகள் மற்றும் 2 பீரங்கி படை கப்பல் வரிசைகளை கொண்டு செயல்பட தொடங்கியது. ஆகத்து 18, 1978ல் இதன் பணிகளை வரையறை செய்து கடலோர காவல் படை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அடுத்த நாளில் இருந்து இப்படைப்பிரிவு முறையாக நடைமுறைக்கு வந்தது. கடற்படையின் துணை அட்மிரல் வி. எ. காமத் இதன் முதல் தலைவராக இருந்தார்.
 
 
 
== கடலோர காவல்படையின் பிரிவுகள் ==
 
=== பொதுப்பணி பிரிவு அலுவலர்கள் ===
கடலில் கப்பல்கள் செல்லும் போது அவற்றை கட்டளையிட்டு வழிநடத்துபவர்கள் இப்பிரிவு அலுவலகர்கள் ஆவர். கப்பலில் உள்ள பல வகையான ஆயுதங்களையும் உணரிகள் போன்ற கருவிகளையும் கையாள்வது இவர்கள் பொறுப்பில் உள்ளதாகும். கப்பலின் பாதுகாப்பு, கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பு, போர் மற்றும் அமைதி காலங்களில் கப்பலை செலுத்தும் செலுத்தும் பொறுப்பு போன்றவை இவரை சார்ந்ததாகும்.
 
=== வானூர்தி செலுத்தி \மாலுமி ===
கடலோர காவல்படை கடற்கரையோரமாக உள்ள வான்தளங்களில் இருந்து வானூர்திகளை இயக்கி கடல்பகுதியின் சிறப்பு பொருளாதார மண்டலத்தை கண்காணிக்கிறது. உலங்கு வானூர்திகளை கரையோர ரோந்து பணிக்கும், கண்காணிப்பிற்கும், தேடுதல் பணிக்கும் பயன்படுத்துகிறது. இந்த வானூர்திகளை கடலில் இயக்குவது சற்று கடினமான செயலாகும். இதற்கு சிறப்பு திறன் உள்ள ஆட்கள் தேவை. சிறப்பு பயிற்சி பெற்ற இப்பிரிவு அலுவலகர்கள் இவ்வகையான பணிகளில் ஈடுபடுவார்கள்.
 
=== தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள் ===
 
தற்போதய நவீன கப்பல்களும் வானூர்திகளும் சிறந்த தொழில்நுட்பங்களையும் எந்திரங்களையும் கொண்டுள்ளன. அவற்றை பராமரிப்பதும் தயார்நிலையில் வைத்திருப்பதும் முதன்மையாகும். இப்பிரிவு அலுவர்கள் இவற்றை கவனித்துகொள்வார்கள்.
 
== அமைப்பு ==
கடலோர காவல் படை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் [[மும்பை|மும்பையிலும்]], கிழக்கு மண்டலத்தின் தலைமையிடம் [[சென்னை|சென்னையிலும்]], [[அந்தமான் நிக்கோபர் தீவுகள்|அந்தமான் & நிக்கோபர்]] மண்டலத்தின் தலைமையிடம் [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேரிலும்]] மற்றும் வட மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் [[காந்திநகர்|காந்திநகரிலும்]] அமைத்துள்ளது. மொத்தம் 5440 பேர் இதில் பணிபுரிகின்றனர். தற்போதைய தலைவரின் பெயர் துணை அட்மிரல் அனில் சோப்ரா. கடலோர காவல்படை மொத்தம் 29 கடலோரகாவல் நிலையங்களையும், 2 வான் தளங்களையும் ([[தமன்]] & சென்னை) , [[கோவா]], [[கொல்கத்தா]], [[போர்ட் பிளேர்]] போன்றவற்றில் வான் வளாகங்களையும் கொண்டுள்ளது.
 
== கப்பல்கள் மற்றும் வானூர்திகள் ==
 
கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்களில் Indian Coast Guard Ship (ICGS) என்று எழுதப்பட்டிருக்கும்.
 
{{இந்திய இராணுவம்}}
 
 
[[பகுப்பு:இந்திய படைத்துறை]]
[[bn:ভারতীয় উপকূলরক্ষী বাহিনী]]
[[en:Indian Coast Guard]]
[[it:IndianGuardia Coastcostiera Guarddell'India]]
[[ja:インド沿岸警備隊]]
[[kn:ಭಾರತೀಯ ಕರಾವಳಿ ಭದ್ರತಾಪಡೆ]]
44,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/809480" இருந்து மீள்விக்கப்பட்டது