பை (கணித மாறிலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
'''பை (π)''' என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு [[எண்]]களில் ஒன்று. ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] சுற்றளவு (பரிதி), அதன் [[விட்டம்|விட்டத்தைப்போல]] பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். பை [[அறிவியல்|அறிவியலிலும்]] [[பொறியியல்]] துறையிலும் மிகவும் பயன்படுவதால், இதனைக் கணிக்க பல சமன்பாடுகளும் தோராயமாக கணக்கிடும் முறைகளும் உண்டு.
 
பைக்கு கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் [[ஆரியபட்டா]] அவர்கள் கணக்கிட்ட அளவு அண்மைக்காலம் வரையிலும் மிகத் துல்லியமானது. இன்றோ பையின் (π ) அளவை ஒரு [[டிரில்லியன்]] பதின்ம (தசம) எண்களுக்கும் மேலாக, மாபெரும் வல்லமை படைத்த [[கணினி]]களைக் கொண்டு கணித்து இருக்கிறார்கள். என்றாலும் பையின் பதின்ம எண் வரிசையிலே, எண்கள் எந்த முறையிலும் மீண்டும் மீண்டும் வாராமல் இருப்பது எதிர்பார்க்கப்பட்டது எனினும் ஒரு வியப்பான செய்தி. இந்த பையின் பதின்ம(தசம) எண்கள் வரிசையில் முடிவேதும் இல்லை. இவ்வகை எண்கள் முடிவிலா துல்லியவகையைச் சேர்ந்த சிறப்பு எண்கள். இதனை [[விஞ்சிய எண்கள்|வேர்கொளா சிறப்பு எண்கள்]] (transcendental number) என அழைக்கப்படும்.
 
பை (π) என்னும் எழுத்தானது வட்டத்தின் விட்ட வகுதியை குறித்ததற்கு வரலாற்றுக் காரணம், [[கிரேக்கம்|கிரேக்கர்]]கள் வட்டத்தின் சுற்றளவை குறிக்க ''பெரிமீட்டர்'' "''περίμετρον''" ([[பரிதி]]) என்னும் சொல்லை ஆளுவதால் அதன் முதல் எழுத்தாகிய பை (π) யைப் பயன்படுத்தினர். இன்று அனைத்துலக மொழிகளிலும் இவ்வெழுத்தே
எடுத்தாளப்பெறுகின்றது.
 
வரிசை 20:
== '''பை''' (<math>\pi</math>) யின் சில பண்புகள் ==
* ''π'' என்பது ஒரு [[விகிதமுறா எண்|வகுனி அல்லா எண்]] (irrational number). அதாவது விகிதம் போல் வகு கோட்டுக்கு மேலும் கீழும் முழு எண்களைக்கொண்ட ஒரு [[விகிதமுறு எண்|வகுனி எண்]]ணாக எழுத இயலாத எண் [குறிப்பு: வகுனி எண்= வகும எண் = விகித எண், வகுதி எண்]. இம்முடிவை 1761 ஆம் ஆண்டு திரு. ''சோஃஆன் ஃஐன்ரிச் லாம்பெர்ட்'' (Johann Heinrich Lambert) என்பார் நிறுவினார் (நிறுவுதல் = எண்பித்தல், எண் என்றால் எளிய என்றும் பொருள்).
* ''π'' ஒரு [[வேர்கொளா எண்]] (transcendental number). இம்முடிவை 1882 ஆம் ஆண்டு திரு. ''ஃவெர்டினாண்டு ஃவான் லிண்டமன்'' (Ferdinand von Lindemann) நிறுவினார் (எண்பித்தார்). பை என்பது துல்லியம் கடந்த எண் என்பதால் இதனை வகுனிகளால் ஆன குணகள் கொண்ட எந்தவொரு ஒரு [[பல்லடுக்கன்|பல்லடுக்கனின்]] (பல்லடுக்குத் தொடரால் ஆன ஒரு செயற்கூறின்) (polynomial]) வேர் எண்ணாகவும் (root) பெறமுடியாது.
 
== சில பயனுடைய ஈடுகோள்கள் (formulae, equations) ==
"https://ta.wikipedia.org/wiki/பை_(கணித_மாறிலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது