தி. ச. வரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வரதர்''' என அழைக்கப்படும் '''தி. ச. வரதராசன்''' (தியாகர் சண்முகம் வரதராசன்) ([[ஜூலை 1]], [[1924]] - [[டிசம்பர் 21]], [[2006]]), சிறுகதை, புதுக் கவிதை, [[குறுநாவல்]], [[இதழியல்]], பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
 
==பிறப்பும் கல்வியும்==
1924 இல் பொன்னாலையில் சண்முகம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் வரதர். இரத்தினம்மா, அன்னம்மா, தங்கச்சியம்மா ஆகியோர் அவரது சகோதரிகள். வரதர் ஒரு புலாலுண்ணாத சைவ வேளாளர். இவரது தந்தை ஒரு வர்த்தகர். தனது ஆரம்பக் கல்வியை பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் பெற்றார். ஆறாம் வகுப்பை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், ஏழாம் வகுப்பை சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையிலும், எட்டாம் வகுப்பை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் கற்றார். சிரேட்ட தராதரப் பத்திர வகுப்பை மீண்டும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்றார்.
 
==திருமண வாழ்க்கை==
வரதர் தனது 27ஆவது வயதில் சுழிபுரத்தில் பிறந்து மலேயாவில் வாழ்ந்த ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினரின் மகளான மகாதேவியம்மாவை 1951 நவம்பர் 7 ஆம் திகதி திருமணம் செய்தார். இவர்களுக்குச் செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். இவர்களில் செந்தாமரை கனடாவிலும் மலர்விழி லண்டனிலும் உள்ளனர். வரதர் ஆசிரியையான தேன்மொழியுடன் இறுதிவரை வாழ்ந்தார்.
 
==சிறுகதைகள், கவிதை==
"https://ta.wikipedia.org/wiki/தி._ச._வரதராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது