சரக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mk:Теорија на струни
No edit summary
வரிசை 1:
[[image:Calabi-Yau-alternate.png|thumb|சரக்கோட்பாடு]]
சரக்கோட்பாடு என்பது [[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலில்]] ஒரு முக்கியமான கோட்பாடு, சரக்கோட்பாடு [[துணுக்க விசையியல்|துணுக்க விசையியல்லையும்]], [[பொது சார்பியல்|பொது சார்பியல்லையும்]] சமரசப்படுத்த முயலும் ஒரு கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு "அனைத்ததுலககோட்பாடுக்கு" () ஒரு நல்ல போட்டியிடும் கோட்பாடு (நபர்) என்றே கூற‌லாம். அனைத்ததுலககோட்பாடு என்பது [[அடிப்படை விசைகள்]] மற்றும் "பொருள்" ஆகியவற்றை கணிதமுறையில் விளக்கவள்ள ஒரு பெரிய கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு இன்னும் பரிசோதித்து உறுதி செய்யப்பட வேண்டிய ஒரு கோட்பாடு ஆகும்.
 
சரக்கோட்பாட்டின்படி அணுவிலுள்ள எலக்ட்ரான் மற்றும் குவார்க் ஆகியவை 0-பரிமாண பொருட்களல்ல, 1-பரிமாண அசைவுறும் கோடுகள்("சரங்கள்") ஆகும். ஆரம்பகால சரக்கோட்பாடுகளில், போசானிக் சரங்கள், போசான் துகள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. இக்கருத்தாக்கம் பின்னர் ''மீச்சரக்கோட்பாடு''-ஆக மேம்படுத்தப்பட்டது. மீச்சரக்கோட்பாட்டில் [[போசான்]] துகள்களுக்கும் [[பெர்மியான்]] துகள்களுக்கும் ஒருவகைத் தொடர்பு([[மீச்சமச்சீர்மை]]) உள்ளது என நிறுவப்பட்டது. அறியப்பட்ட 4 வெளி-நேர பரிமாணங்களைத் தவிர்த்து மேலும் பல, கண்ணுக்கு புலப்படாத கண்டறிய இயலா, பரிமாணங்கள் சரக்கோட்பாட்டை நிறுவ தேவைப்படும்.
 
இக்கோட்பாட்டின் தோற்றம் ''இரட்டை ஒத்ததிர்வு மாதிரி'' (வலிய விசை) ஆய்வுகளுடன் தொடர்புடையது. அதன் தொடர்ச்சியாக 5 வெவ்வேறு சரக்கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அனைத்தும் பெர்மியான்களை தங்கள் கோட்பாடுகளில் கொண்டிருந்தன. மேலும் அனைத்துலகக் கோட்பாடுகளுக்குத் தேவையான பண்புகளையும் கொண்டிருந்தன. அவற்றிலிருந்த இருமையியல்புகளால் 5 கோட்பாடுகளும் தொடர்புபடுத்தப்பட்டமையால், 1990-களின் மத்தியிலிருந்து 11-பரிமாண கோட்பாடான ''[[எம் கோட்பாடு]]''-ஆக (5 வெவ்வேறு சரக்கோட்பாடுகளின் பண்புகளையும் ஒருங்கே கொண்டதாக அறியப்படுவது) மேம்படுத்தப்பட்டது.
 
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சரக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது