மூதின் முல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மூதின்முல்லை''' என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும். மறவர்க்கு மட்டுமின்றி அந்த மறக்குடியில் வந்த மடப்பத்தினையுடைய மகளிர்க்கும் மறம் உண்டு என மிகுத்துக் கூறுவது மூதின் முல்லை எனப்படும். (மூது இல்-பழைமையான குடியில் வந்த இல்லாளின்; முல்லை- இயல்புமிகுதி.)
சான்று:

:வந்த படைகோனாள் வயின் முலைமறித்து

வெந்திறல் எஃகம் மிறைகொளீஇ-முந்தை

முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள்

புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.
முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள்

புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.

பொருள்:

முன்னாட்களில் நடந்த போரில் தந்தையும் கணவனும், தன்னையரும் மாண்டு கல்லில் நின்றார்கள். அக்குடியில் வந்த மறத்தி தன் மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது பகைவரது படை வந்த்து எனப் பறை முழங்கியது. அது கேட்டுப் பொறாமல் தன் பிள்ளையின் வாயிலிருந்து முலையைப் பறித்தாள். எஃகம்(வாள்) ஒன்றின் வளைவைத் தானே நிமிர்த்தினாள். பிள்ளையின் கையில் கொடுத்தாள். தந்தை முதலியவர்களின் நடுகல்லைக் காண்பித்தாள். பின் தன் புதல்வனைப் போருக்குப் போ என விடுத்தாள். இதில் மூதில் மடவாளின் மறத்தின் மிகுதி கூறப்பட்டிருப்பதால் இது மூதின்முல்லை எனும் துறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மூதின்_முல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது