ஆர்எச் குருதி குழு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==ஆர்எச் காரணி==
ஒவ்வொரு [[மனிதர்|மனிதனிலும்]] உள்ள குருதியிலுள்ள [[குருதிச் சிவப்பணு]]க்களின் மேற்பரப்பில் '''ஆர்எச் காரணி''' இருக்கலாம், அல்லது இல்லாமல் போகலாம். ஆர்எச் காரணி இருக்குமாயின் அவர் '''ஆர்எச் நேர்''' (Rh+) உள்ளவர் என்றும், இல்லாதுவிடின் '''ஆர்எச் எதிர்''' (Rh-) உள்ளவர் என்றும் கூறுவோம். இங்கே முக்கியமாக D பிறபொருளெதிரியாக்கியே கருதப்படும். D பிறபொருளெதிரியாக்கி இருப்பின் ஆர்எச் நேர் என்றும், D பிறபொருளெதிரியாக்கி இல்லாதுவிடின் ஆர்எச் எதிர் என்றும் அமையும். இதனை குறியிடும்போது பொதுவாக ABO வகையினைக் குறிப்பிட்டு, அதனைப் பின்னொட்டாக நேர் அல்லது எதிர் குறியீட்டை வழங்குவர்.
 
எ.கா.:
* (A +) என்பது A வகைக்குருதியில் Rh + இருப்பது ஆகும். அதாவது A வகைக் குருதியாக இருக்கும் அதேநேரம், அங்கே ஆர்எச் காரணியான D பிறபொருளெதிரியாக்கியையும் கொண்ட குருதியாகும்.
* (B -) என்பது B வகைக்குருதியில் Rh - இருப்பது ஆகும். அதாவது B வகைக் குருதியாக இருக்கும் அதேநேரம், அங்கே ஆர்எச் காரணியான D பிறபொருளெதிரியாக்கி அற்ற குருதியாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்எச்_குருதி_குழு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது