ஜார்ஜ் ஸ்டீபென்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
[[File:Killingworth-locomotive.jpg|thumb|left|கில்லிங்க்வொர்த் நிலக்கரி சுரங்கத்தில் 1816 -ல் ஜார்ஜ் ஸ்டீபென்சன் வடிவமைத்த தானியங்கி நீராவிப் பொறி.]]
நீராவியால் தானே இயங்கும் ஓடும் இயந்திரத்தி வடிவமைக்க இவர் முயற்சிகள் மேற்கொண்டார். ரிச்சர்ட் ட்ரெவிதிக் என்பவர் 1804-ல் நீராவியால் ஓடும் முதல் இயந்திரத்தை உருவாக்கினார். அது மணிக்கு நான்கு மைல் வேகத்தில் மரத் தண்டவாளத்தில் ஓடியது. ஜார்ஜ் ஸ்டீபென்சன் அதில் உள்ள குறைகளைக் களைந்து 1825 -ல் ஸ்டாக்டன் என்னும் ஊரிலிருந்து டார்லிங்டன் என்ற ஊர்வரை இரும்புத் தண்டவாளம் மூலம் தொடர்வண்டிப் பாதை அமைத்து, நீராவி எந்திரம் மூலம் அவ்வண்டியைத் தானே ஓட்டியும் காட்டினார். அப்பொழுது தயாரிக்கப்பட்ட அந்த இயந்திரமே உலகப் புகழ்பெற்ற 'இராக்கெட்' என்ற புகைவண்டியாகும். இதற்கும் முன்பே 1820-ல் 13 கி.மீ. தூரம் ஹெட்டன் சுரங்கம் முதல் சுந்தர்லேண்ட் வரை இரயில் பாதை அமைத்துப் புகைவண்டியை ஓட்டினார். இதுவே விலங்கு சக்தியின் துனையின்றி தானே இயங்கிய முதல் தொடர்வண்டிப் பயணம் ஆகும்.
==தொடர் வண்டிப்பாதைகள் அமைப்பு==
1821-ல் பல சுரங்கங்களை இணைக்கும் வகையில் 40 கி.மீ. தொலைவு பாதை அமைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்ததது. அப்பணியை ஜார்ஜ் ஸ்டீபென்சனிடம் ஒப்படைத்தது. அதை அமைக்கும் முயற்சியில் ஸ்டீபென்சனுக்கு அவருடைய 18 வயதான இவருடைய மகன் இராபர்ட்டும் உதவி செய்தார். இது போன்ற இரயில் பாதைகளை உருவாக ' இராபர்ட் ஸ்டீபென்சன் நிறுவனம்' ஒன்றை உருவாக்கித் தன்னுடைய மகன் இராபர்ட்டை அதன் நிர்வாக இயக்குநராக அமர்த்தினார். இந்நிறுவனம் மூலம் இங்கிலாந்து முழுவதும் பல இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. இவர் அமைத்த இரயில் பாதைகளின் அகலம் 1440 மி.மீ (1.4 மீ) ஆக இருக்கும் படி அமைக்கப்பட்டன. இந்த அளவே உலகம் முழுமைக்கும் இரயில் பாதை அமைக்கும்போது பின்னாளில் பின்பற்றப்பட்டது. அதன் பின்னர் சுமார் 10 வருட காலம் தொடர்ந்து வெவ்வெறு இடங்களில் இரயில் பாதைகள் அமைக்கும் பணிகளில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் தொடர்ந்து ஈடுபட்டார். எழுத்தறிவு பெறாமல் அறிவியலில் அருஞ்சாதனை புரிந்த இவரின் புகழை இன்றைக்கும் ஓடிக் கொண்டிருக்கும் தொடர்வண்டிகள் பறாஇ சாற்றுகின்றன.
==தொழிற்புரட்சி==
இரயில் வண்டிகள் இயக்கவும், இரயில் பாதைகளை உருவாக்கவும் ஜார்ஜ் ஸ்டீபென்சன் எடுத்த முயற்சிகளால் [[தொழிற்புரட்சி|தொழிற்புரட்சியே]] ஏற்பட்டது. உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பெறாவும், சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைந்து இடையூறின்றி பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய உதவியாக அமைந்தன.
==சிறப்புகள்==
* 1847-ல் எந்திரப் பொறியாளர் பயிற்சி நிறுவனத்தின் முதல் தலைவராக ஜார்ஜ் ஸ்டீபென்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* டெர்பிஷைர் பகுதியில் செஸ்டர்ஃபீல்டு ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பயன்படுத்திய பொருள்கள் ஓர் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
* இவருடைய பித்தளை உருவச்சிலை ஒன்று செஸ்டர்ஃபீல்டு இரயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. * அது போலவே இவர் வடிவமைத்த 'இராக்கெட்' என்ற இரயில் எந்திர மாதிரி வடிவம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
* இங்கிலாந்து வங்கி இவருடைய உருவப்படம் அச்சிட்ட பண நோட்டுகளை வெளியிட்டுள்ளது.
* இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
==மறைவு==
1848-ல் எலென் கிரிகோரி என்ற பெண்ணை இவர் மூன்றாவது [[திருமணம்]] செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் இவருக்கு 67 வயதான போது [[நுரையீரல்]] நோயினால் பாதிக்கப்பட்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
 
[[பகுப்பு: இங்கிலாந்து பொறியாளர்கள்]]
[[பகுப்பு: கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:[[1781 பிறப்பு]][[1848 இறப்பு]]]]
[[ar:جورج ستيفنسون]]
[[arz:جورج ستيفنسون]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஸ்டீபென்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது