ஜெயதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஜெயதேவர்''' (முழுப்பெயர்) ஜெயதேவ கோஸ்வாமி) [[இந்தியா|இந்திய]] வரலாற்றின் இணையற்ற [[கவிஞர்|கவி]]களில் ஒருவர். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழி வல்லுனர். [[கி.பி.]] 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பானது, புகழ்பெற்ற ''[[கீத கோவிந்தம்]]'' என்னும் [[காவியம்]]. இந்த கவிதைப் படைப்பானது, [[இந்து சமயம்|இந்து]]க் கடவுளாக [[கண்ணன்]] மற்றும் [[ராதை]] க்கு இடைய இருந்த தெய்வீக காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான [[இசை]]யுடன் விவரிக்கும்.
 
கீத கோவிந்தம் (சமஸ்கிருதம் गीत गोविन्द) ("கோபியர் பாடல்") 12 அத்தியாயங்களைக் கொண்ட நூலாகும். ஒவ்வொரு பாகமும் 24 [[பிரபந்தம்|பிரபந்தங்களை]] அடக்கியதாகும். ஒவ்வொரு பரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு [[அஷ்டபதி]] என்று பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, [[பரத நாட்டியம்]] மற்றும் [[இசை]]க் [[கச்சேரி|கச்சேரிகளில்]] இன்றளவும் மிகவும் பிரபலம்.
 
1792 இல், சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் முதல்முதலில் இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.
 
[http://www.gitagovinda.org/gg/library/english/gvp/Gita-govinda.pdf இங்கே] ஆங்கில மொழியாக்கமும், அதன் விரிவுரையும் மின்னூல் வடிவில் கிடைக்கிறது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஜெயதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது