செய்குத்தம்பி பாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 982505 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 7:
அக்காலத்தில் [[திருவிதாங்கூர்]] மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பி இம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது.
 
எனினும் இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது. இடலாக்குடியை[[இடலாக்குடி]]யை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.
 
ஞானியார் அப்பாவின் ' மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு ' என்னும் நூலை அச்சிட சென்னை 'இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்கு ' தமிழறிந்த இஸ்லாமியர் தேவைப்பட்டார். சென்னை சென்று அந்நூலைச் சிறப்புடன் பதிப்பித்த செய்குதம்பிக்கு அப்போது வயது 21, அவரது அறிவாற்றலைக் கண்டு ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்திலேயே பிழை திருத்தும் புலவராக அவரை அமர்த்திக் கொண்டனர். மாதம் ரூ60/-ஊதியமும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர். அவர் வறுமையை மறந்து வாழத் தொடங்கிய காலம் இதுவே.
வரிசை 14:
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் [[1907]]-ஆம் ஆண்டு [[மார்ச் 10]] ஆம் தேதி [[சென்னை]]யில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று ''சதாவதானி'' செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் [[நபி]]கள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை காவியங்களையும் எழுதியவர்.
 
ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920 நாஞ்சில் நாட்டில் [[காங்கிரஸ்]] இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையிலேயேநடந்தன.
 
"1937ஆம் ஆண்டில் பாவலர் [[நாகர்கோயில்நாகர்கோவில்]] நகராண்மைக் கழகத் திடலில், [[காங்கிரஸ்]] பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்"என்று [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக]] துணைவேந்தராக இருந்த டாக்டர்வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.
 
பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர். [[நாகர்கோயில்]] பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும்இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின்காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர்.
"https://ta.wikipedia.org/wiki/செய்குத்தம்பி_பாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது