விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
comedy உங்களுக்குக் காமடியாக இருப்பது எங்களுக்குக் கொமடியாக இருக்கிறது :-)
வரிசை 66:
கோபி, மயூரநாதன் அவர்களின் எழுத்தை, ஆக்கங்களை மிகவும் போற்றி மதிப்பவன் நான். தலைப்பில் '''பாலி''' என்றும் '''குளோரைடு''' என்றும் மாற்றியதற்கு காரணம் அவையே சரியானவை. மேலே நான் police, poly ஆகிய சொற்களை எடுத்துக்காட்டியுள்ளேன். Police, poker, potasium, position என்னும் சொற்களில் வழங்கும் முதல் உயிர்மெய் ஒலியானது குறில், நெடில் அல்லது இரண்டிற்கும் இடைபட்ட ஒகரம் ஆகும். policy, poly, positive, possible, point முதலியன அகர வேறுபடுகள் கொண்ட உயிர்மெய் ஒலி. பாலி போன்ற அறிவியல் முன்னொட்டுகள் நூறுக்கணக்கான இடங்களிலே பயன்படுவன. சரியான ஒலிப்பில் இருத்தல் நலம் என்று நினைத்தே திருத்தினேன். நாம் பொதுத்தரம் பேணத் தவறினால், நம் தமிழ் விக்கி தரம் குறைந்ததாக மதிப்பிடப்படும். பொதுத்தரம் பேணுவது நம் எல்லோருக்கும் நல்லது. ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு. இதனை அடையாளப் பிரச்சினையாகக் கொண்டால், பிரிவுணர்வும் தாழ்ச்சியும்தான் ஏற்படும். சுமார் 70-75 மில்லியன் தமிழர்களும் பயன்பெறுமாறும், வழி வழியாக சீரான வளர்ச்சி பெறுமாறும் செயல்படுவதே நல்லது.
அருள்கூர்ந்து தவறாக எண்ணாதீர்கள். பொது நலம்தான் கருத்தித்தான் இவைகளைக் கூறுகிறேன்.--[[பயனர்:செல்வா|செல்வா]] 14:05, 29 ஜனவரி 2007 (UTC)
 
::செல்வா, சிறு தகவல். சில காலத்தின் முன்னர் நோபல் பரிசு பெற்றவர்கள் தொடர்பாக குறுங்கட்டுரைகளை எழுத முனைந்த பின்னர் அதனை நான் கைவிடக் காரணம் தலைப்புக்கள் மாற்றப்படுவதிலான அதிருப்தியே. comedy உங்களுக்குக் காமடியாக இருப்பது எங்களுக்குக் கொமடியாக இருக்கிறது :-) இவ்விடயத்தில் நான் விவாதிக்கப் போவதில்லை. 80% சிங்களவர் இருக்கிறோம். ஆதலால் நீங்களும் சிங்களம் படியுங்கள் என்பதைப் பல்லாண்டுகள் கேட்டு வந்துள்ளோம் என்ற குறிப்பை மட்டும் விட்டுச் செல்ல விரும்புகிறேன். 70-75 மில்லியன் தமிழர்களில் 5 மில்லியன் கூடத் தேறாது ஈழத் தமிழர் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை விக்கிபீடியாப் பயனர்களிலும் பிரதிபலித்தால் மிக இயல்பாக பொதுத்தரம் பேணப்படுமே...[[பயனர்:கோபி|கோபி]] 14:30, 29 ஜனவரி 2007 (UTC)
_____________
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது