இராமகிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற [[தாந்தரிகம்|தாந்தரிக]] பெண்மணி தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதா புரி என்பவரிடம் [[அத்வைதம்|அத்வைத வேதாந்தம்]] கற்ற ராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் [[நிர்விகல்ப சமாதி]]யில் திளைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு [[ராமர்]], [[கிருஷ்ணர்]], ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து [[சீதை]], [[ராதை]] ஆகியோரைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], மற்றும் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] மார்க்கங்களிலும் சாதனை புரிந்து [[இயேசு]], [[நபிகள்]] ஆகியோரின் காட்சிகளையும் ராமகிருஷ்ணர் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
 
[[File:பேளூர் மடம்.JPG|thumb|பேளூர் மடம்]]
=== இறுதி நாட்கள் ===
ராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது [[கல்கத்தா]]வில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த [[மகேந்திரநாத் குப்தா]], தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் ''The Gospel of Sri Ramakrishna'' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. இது [[தமிழ்|தமிழில்]] ''ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்'' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இராமகிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது