இணைபயன் வளையீ

நுகர்வோனின் பயன்பாட்டு அடிப்படையில் ஒர் குறிப்பிட்ட பொருட்தொகுதிக்குரிய (Combination) கேள்விக்கோட்டினை இணைபயன் வளையீ (Indifference curve) விபரிக்கும்.எடுத்துக்காட்டாக நுகர்வோன் ஒருவர் 25 Aயினையும்,1 Bயினையும் நுகரும்போதும், 1 Aயினையும் 20 Bயினையும் நுகரும்போதும் சமமான பயன்பாட்டைப்பெறுகிறார் இவ்விரு பொருட்தொகுதிக்கிடையே உள்ள பல பொருட்தொகுதிகளிலும் சமபயன்பாட்டை பெறுகின்றார். இத் தரவுகளை வரைவாக்கும்போது இணைபயன் வளையீ பெறப்படும்.இணைபயன் வளையீள்ள எல்லா புள்ளிகளும் சமமான பயன்பாட்டை காண்பிக்கும். Indifference curve தமிழில் உபேட்சைவளையீ/சமபயன் வளையீ/சமநோக்கு வளையீ பல பெயர் பெறும்.

வரலாறு தொகு

இணைபயன் வளையீ F.Y.Edgeworth என்பரால் உருவாக்கப்பட்டு Pareto என்பவரால் விரிவாக்கப்பட்டது

இணைபயன் வளையீ இயல்புகள் தொகு

  • இடமிருந்து வலமாக மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும்காரணம் ஒரு பொருளுக்கான கேள்வி அதிகரிப்பானது மற்றைய பொருளின் கேள்வியை குறைப்பதே ஆகும்
  • புறங்குவிந்த கோடுகளாகக்(Convex) காணப்படும்.
  • இரு இணைபயன் வளையீ ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது.
  • நுகர்வோனொருவன்ஒன்றிக்கு மேற்பட்ட பலவளையீகளைக்கொண்டிருப்பான் இவற்றில் வலப்பக்கம் காணப்படும் வளையீ மிகுந்த பயன்பாட்டை காண்பிக்கும்.

எடுகோள்கள் தொகு

இணைபயன் வளையீ வரைவதற்கு சில எடுகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • பொருளுக்கான நுகர்வோனின் விருப்பம் மாறாது
  • நுகர்வோன் வருமானம் முழுவதும் செலவிடுகின்றார்.
  • சந்தையில் பொருட்களுக்கான விலை மாறாதிருத்தல்.
  • நுகர்வோன் எப்பொழுதும் உச்ச பயன்பாட்டினையே பெறுவார்

சில இணைபயன் வளையீ தொகு

 

பொதுவாக இவ்வாறன உபேட்சை வளையீவரைபடத்தினையே நுகர்வோன் காண்பிப்பான். இவற்றில் I3 வளையீ எனைய வளையீகளை விட மிகுந்த பயன்பாட்டை காண்பிக்கும்.

 

பிரதியீட்டுப்பண்டங்களுக்கான இணைபயன் வளையீயானது parallel கோடுகளாகக்காணப்படும்.இவ்விரு பண்டங்களுக்கான கேள்வி அதிகரிப்பு அல்லது குறைவு ஒரு குறிப்பிட்ட எண்விகிதத்தில்(fixed ratio) காணப்படுவதே இதன் காரணமாகும்.

 

பூரணமான இணைப்புப்பண்டங்களுக்கான இணைபயன் வளையீ L வடிவில் காணப்படும்.உதாரணமாக வலது இடது சப்பாத்து இவற்றில் ஒரு வலபக்க சப்பாத்திற்கு இன்னொரு இடபக்கச்சப்பாத்து மூலம் பயன்பாட்டை பெறலாம் அதிகமாக வலப்பக்கச்சப்பாத்தினை வைத்திருப்பதால் நுகர்வோனின் பயன்பாடு அதிகரிக்காது.

பிரயோகம் தொகு

நுகர்வு கோட்பாட்டினை மற்றும் நுகர்வோன்மிகை என்பனவற்றை விளக்க உதவும்

இவற்றையும் பார்க்க தொகு

பிற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைபயன்_வளையீ&oldid=2089214" இலிருந்து மீள்விக்கப்பட்டது