ஒளி அடக்கி (துப்பாக்கி)

புரிகுழல் துப்பாக்கியின் சன்னவாயில் பொருத்தப்படும் ஒரு சாதனம்

ஒளி அடக்கி அல்லது ஒளி நீக்கி, என்பது புரிகுழல் துப்பாக்கியின் சன்னவாயில் பொருத்தப்படும் ஒரு சாதனம் ஆகும். சுடும்போது சன்னவாயில் இருந்து வெளியேறும் அதி-உஷ்ண வாயுக்களை குளிர்விக்கும் இது, கண்ணுக்கு தென்படும் ஒளியை குறைக்கிறது. இருண்ட சூழலில் சுடும்பொழுது, சுடுநருக்கு தற்காலிக பார்வைமறிப்பு ஏற்படும் வாய்ப்புகளை குறைப்பதே, இந்த சாதனத்தின் முதன்மை நோக்கம் ஆகும். ஒளி அடக்கி, கண்ணுக்கு புலப்படும் ஒளியின் அடர்த்தியை, எதிரிக்கு தெரியாத வண்ணம் குறைக்கும், இந்த  பயன் இரண்டாம்பட்சமே ஆகும்.[1]

A2-ரக ஒளி அடக்கியை விட்டு வெளியேறும் சன்னம், அதிவேக காற்றிடைவெளி பளீரொளியில் படமாக்கப்பட்டது.
எஸ்.ஜி. 550-ல் உள்ள பறவைக்கூண்டு வகையான ஒளி அடக்கி 

ஒளி அடக்கியும் சன்னவாய் நிறுத்தியும் ஒரே இடத்தில் பொருத்தப்பட்டாலும், இவை இரண்டும் வெவ்வேறு என்பதை நினைவில் வையுங்கள். வெடியொளியை குறைக்க மட்டுமே ஒளி அடக்கி பயன்படும். சன்னவாய் நிறுத்தி என்பது பெரிய சுடுகலன்களின் பின்னுதப்பை குறைப்பதற்கு மட்டுமே பயன்படும், மேலும் அது வெடியொளியை குறைக்காது.[2]

மேலும் பார்க்க  தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Army Field Manual FM 3-22
  2. DiMaio, Vincent J.M. (2002). Gunshot Wounds: Practical Aspects of Firearms, Ballistics, and Forensic Techniques, SECOND EDITION. Taylor & Francis. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-8163-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_அடக்கி_(துப்பாக்கி)&oldid=2115624" இலிருந்து மீள்விக்கப்பட்டது