சன்னவாய்
சுடுகலனின் சன்னவாய் (Muzzle) என்பது குழலில் இருந்து, எறியம் வெளியேறும் முனை ஆகும்.[1]
சன்னவாயின் சரியான பொறிவினை, துல்லியத்தை அதிகரிக்கும். ஏனெனில், இதுதான் குழலுக்கும் எறியத்திற்குமான கடைசி தொடுபுள்ளி. எறியத்திற்கும் சன்னவாயிற்கும் நடுவே இடைவெளி இருந்தால், குழலில் இருந்து வெளியேறும் உந்து-வாயுக்கள் சீராக பரவாமல், நிர்ணயித்த பாதையில் இருந்து எறியத்தை திசைதிருப்பிவிடும். (இடைநிலை எறியியலை பார்க்க).
துப்பாக்கியை சுடும்போது, சன்னவாயில் (வெடியொளி எனப்படும்) ஒரு திடீரொளி காணப்படும். இது குழலில் இருந்து வெளியேறும் சூடான வாயுக்களால் உருவாகிறது. அவ்வாறு தோன்றும் திடீரொளியின் அளவு, குழலின் நீளம், வகை, வெடிமருந்தின் அளவு போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்திருக்கும். இந்த விளைவுகளை குறைக்க ஆயுதத்தின் சன்னவாயில் ஒளி அடக்கிகள் இணைக்கப்படும்.[1]
மேலும் பார்க்க
தொகுமூலப்பதிவுகள்
தொகுQuertermous, Russell C.; Quertermous, Steven C. (1981). Modern Guns (Revised 3rd ed.). Paducah, Kentucky: Collector Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89145-146-3.
குறிப்புகள்
தொகுஇந்த சுடுகலன்கள் பற்றிய கட்டுரை, ஒரு குறுங்கட்டுரையே. இதை விவரித்து விக்கிபீடியாவிற்கு தாங்கள் உதவலாம். |