கோவைப்புதூர்

கோயமுத்தூரில் உள்ள ஒரு புறநகர் பகுதி

தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் கோவைப்புதூர். இது கேரளா மாநிலம் பாலக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவைபுதூர்
கோவைபுதூர்
கோவைபுதூர்
நேர வலயம்+5.30GMT

வரலாறு தொகு

இது முன்னாள் ஜனாதிபதி ரா. வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக இருந்த போது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. இது திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு கச்சிதமான நகர்.

ஆரம்பகாலத்தில் அரசு ஊழியர்களுக்கு தவணை முறையில் வீடு மனைகள் வழங்கப்பட்டன. இங்கு ஒரு நாகரிக நகருக்கு தேவையான எல்லா வசதிகளும் முன்னரே திட்டமிடப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு அஞ்சல் நிலையம், வணிக வளாகம், பேருந்து நிறுத்தங்கள், விளையாட்டு திடல்கள், நீர் நிலைத் தொட்டிகள், மற்றும் பல.

இங்கு தமிழக அரசின் சிறப்பு காவல் அணியின் ஒரு பயிற்சி மையமும் அமைந்துள்ளது. காவலர்களுக்கான தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நேரான சாலைகளும், சாலை ஓரங்களில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களும், போதுமான இடைவெளியில் கட்டப்பட்டுள்ள வீடுகளும் கோவைப்புதூரினை ஒரு அழகான நகராக உருவாக்கியுள்ளது.

 
குழந்தை யேசு தேவாலயம்
 
வேணுகோபால் சுவாமி திருக்கோயில் விமானம்
 
நாக பிள்ளையார் கோயில்

வழிபாட்டுத் தலங்கள் தொகு

  • குழந்தை யேசு தேவாலயம்[1]
  • நாக பிள்ளையார் கோயில்
  • வேணுகோபால் சுவாமி திருக்கோயில்
  • விசாலாட்சி அம்மன் கோயில்

கல்லூரிகள் தொகு

  • சி பி எம் கலை அறிவியல் கல்லூரி[2]
  • வி எல் பி கலை கல்லூரி
  • வி எல் பி பொறியியல் கல்லூரி
  • ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மேற்கோள்கள் தொகு

  1. "Infant Jesus Church". Archived from the original on 2011-09-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
  2. CBM college official website
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவைப்புதூர்&oldid=3854498" இலிருந்து மீள்விக்கப்பட்டது