சார்லசு அகத்தசு யங்

அமெரிக்க வானியலாளர்

சார்லசு அகத்தசு யங் (Charles Augustus Young) (திசம்பர் 15, 1834 – ஜனவரி 4, 1908) பெயர்பெற்ற அமெரிக்கச் சூரியக் கதிர்நிரலியல் வானியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் சில நாட்கள் நிமோனியா காய்ச்சல் வாய்ப்பட்டு 1908 ஜனவரி 4 ஆம் நாளன்று தன் வீட்டில் இறந்தார். இவர் பல சூரிய மறைப்புகளைக் கண்டுள்ளார். சூரியக் கதிர்நிரலியலில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் 1872 ஆகத்ஹு 3 இல் கதிர்நிரல்மானி வழியாக சூரியகனல் உமிழ்வைக் கண்டார். மேலும் இது புவியின் காந்தப் புயலுடன் ஒருங்கமைந்த்தையும் கண்ணுற்றார்.

சார்லசு அகத்தசு யங்
பிறப்பு(1834-12-15)திசம்பர் 15, 1834
ஃஅனோவர், நியூஃஆம்ப்சயர்
இறப்புசனவரி 3, 1908(1908-01-03) (அகவை 73)
ஃஅனோவர், நியூஃஆம்ப்சயர்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
பணியிடங்கள்பிரின்சிடன்
கல்வி கற்ற இடங்கள்டார்மவுத்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஃஎன்றி நோரிசு இரசல்
விருதுகள்ஜான்சென் பதக்கம் (1890)[1]

டார்மவுத் கல்லூரியில் பட்டம்பெற்ற இவர் அங்கு 1865 இல் பேராசிரியரானார். பிறகு அங்கே 1877 வரை பணிபுரிந்த பின்னர் பிரின்சிடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

இவர் நல்ல கல்வியாளர்; பல பரவலாகப் பயன்பட்ட பல வானியல் பாட நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் வானியல் கையேடும் ஒன்றாகும். பல ஆண்டுகட்குப் பின் ஃஎன்றி நோரிசு இரசலும் இரேமாண்டு சுமித் தூகானும் ஜான் குவின்சி சுடீவர்ட்டும் தாம் எழுதிய இருதொகுதி வானியல் நூலை Astronomy: A Revision of Young’s Manual of Astronomy எனத் தலைப்பிட்டனர்.

காட்சி மேடை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Prix Janssen (médaille d'or)". L'Année scientifique et industrielle 35: p. 465. 1891. http://books.google.com/books?id=m_80AAAAMAAJ&pg=PA465. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_அகத்தசு_யங்&oldid=2918468" இலிருந்து மீள்விக்கப்பட்டது