செலீனயில் புளோரைடு

செலீனயில் புளோரைடு, செலீனைல் இருபுளோரைடு, செலீனியம் ஆக்சிபுளோரைடு அல்லது செலீனியம் ஈராக்சி இருபுளோரைடு (Selenoyl fluoride, selenoyl difluoride, selenium oxyfluoride, or selenium dioxydifluoride) என்பது SeO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும்.

செலீனயில் புளோரைடு
இனங்காட்டிகள்
14984-81-7 Y
ChemSpider 10329076 N
InChI
  • InChI=1S/F2O2Se/c1-5(2,3)4 N
    Key: VCPFQVXWYPMUKZ-UHFFFAOYSA-N N
  • InChI=1/F2O2Se/c1-5(2,3)4
    Key: VCPFQVXWYPMUKZ-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=[Se](=O)(F)F
பண்புகள்
SeO2F2
வாய்ப்பாட்டு எடை 148.95 கி/மோல்
தோற்றம் வாயு.
உருகுநிலை −99.5 °C (−147.1 °F; 173.7 K)
கொதிநிலை −8.4 °C (16.9 °F; 264.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

அமைப்பு தொகு

வடிவஞ்சிதைந்த நான்முகி அமைப்பில் செலீனயில் புளோரைடு காணப்படுகிறது. இவ்வமைப்பில் உள்ள O-Se-O பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 126.2° , O-Se-F பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 108.0° மற்றும் F-Se-F பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 94.1° [1] என்ற கோண அளவுகளில் காணப்படுகிறது. மேலும், செலீனியம் புளோரின் இடையிலான பிணைப்பு நீளம் 1.685 Å மற்றும் செலீனியம் ஆக்சிசன் இடையிலான பிணைப்பு நீளம் 1.575 Å என்ற இடைவெளிகளையும் கொண்டிருக்கிறது.[2]

தயாரிப்பு தொகு

புளோரோசல்போனிக் அமிலத்தை பேரியம் செலீனேட்டுடன்[3] அல்லது செலீனிக் அமிலத்துடன் சேர்த்து இலேசாக சூடுபடுத்தினால் செலீனயில் புளோரைடு வாயு உண்டாகிறது.

வினைகள் தொகு

ஓத்த சல்பியூரைல் புளோரைடை விட செலீனயில் புளோரைடு அதிக வினைத்திறன் கொண்டிருக்கிறது. நீராற்பகுக்கவும், ஒடுக்குதல் வினைக்கும் எளிதாக உட்படுகிறது. அமோனியாவுடன் தீவிரமாக வினைபுரிகிறது.

செனான் இருபுளோரைடுடன் செலீனயில் புளோரைடு வினைபுரிந்து FXeOSeF5. சேர்மத்தைக் கொடுக்கிறது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. Wai-Kee Li, Gong-du Zhou, Thomas C. W. Mak Advanced structural inorganic chemistry page 651 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-921694-0
  2. Kolbjørn Hagen, Virginia R. Cross and Kenneth Hedberg "The molecular structure of selenonyl fluoride, SeO2F2, and sulfuryl fluoride, SO2F2, as determined by gas-phase electron diffraction" Journal of Molecular Structure 1978 volume 44 issue 2 page 187 எஆசு:10.1016/0022-2860(78)87027-6
  3. Advanced Inorganic Chemistry A Comprehensive Text Cotton and Wilkinson
  4. http://www.scribd.com/doc/30122309/Noble-Gas-Compounds
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனயில்_புளோரைடு&oldid=2747235" இலிருந்து மீள்விக்கப்பட்டது