அம்பலகாரர் (இனக்குழுமம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அம்பலகாரர் என்போர் தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் தேவர்கள் எனப்படும் முக்குலத்தோரில் ஒரு உட்பிரிவினராவர். முக்குலத்தோர் அல்லது தேவர் எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்.[சான்று தேவை] "அம்பலகாரர்" என்பது கள்ளர் சாதிப் பட்ட பெயர்களுள் ஒன்றாகும். இருப்பினும் சில ஊர்களில் மறவர் சாதி மக்களும் அம்பலகாரர் என்று அறியப்படுகின்றனர். முக்குலத்தோர் மக்கள் வாழும் கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் "அம்பலம்" என்ற வார்தையைப் பட்டமாகப் பயன்படுத்திக் கொள்கிறனர். அம்பலகாரன் என்ற சொல்லுக்கு "கள்ளர் சாதித் தலைவன்" என்றும் "கள்ளர் நாட்டுத் தலைவன்" என்றும் பொருள் தருகிறது தமிழகராதி.
கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதிய தென்பான்டிச் சிங்கம் எனும் நூல் அம்பலகாரர்களின் வரலாற்றையும் பெருமைகளையும் கூறுகிறது. இந்நூல் கள்ளர் நாட்டுத் தலைவன் வாளுக்கு வேலி அம்பலத்தின் வாழ்க்கை வரலாறாகும். இந்நூலுக்காக கலைஞர் பல விருதுகளைப் பெற்றார்.[சான்று தேவை] வாளுக்கு வேலி தென் தமிழகத்தில் கி.பி. 1800களில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு கள்ளர் நாட்டுத் தலைவராவார். மாமன்னர் மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலியின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின.