சிறிய மணற்பாங்கான பாலைவனம்

சிறிய மணற்பாங்கான பாலைவனம் (Little Sandy Desert), ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியாவில் 1,11,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பாலைவனம் சிறு மணற்குன்றுகளும், குட்டை மரங்களும், புதர்களும் கொண்டது. 20ஆம் நூற்றாண்டில் இப்பாலைவனத்தின் குறுக்கே கேனியங் ஸ்டாக் பாதை செல்கிறது.[1]

மேற்கு ஆஸ்திரேலியாவில் சிறிய மணற்பாங்கான பாலைவனத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
சிறிய மணற்பாங்கான பாலைவனத்த்தின் குறுக்கே செல்லும் கேனியங் ஸ்டாக் பாதை
சிறிய மணற்பாங்கான பாலைவனத்தின் அருகே துர்பா நீர் ஊற்று

விளக்கம்

தொகு

சிறிய மணற்பாங்கான பாலைவனம் 110,900 km2 (42,800 sq mi) பரப்பளவு கொண்டது. இதன் வடக்கில் பெரிய மணற்பாங்கான பாலைவனம், கிழக்கில் கிப்சன் பாலைவனம் அமைந்துள்ளது.[2] இதன் வடக்கில் கர்லமில்யி தேசியப் பூங்கா உள்ளது.[3]

புவியியல் & மக்கள்

தொகு

கடின வெப்பம் கொண்ட இப்பாலைவனம் செம்மண் குன்றுகளும், பாறைச் சமவெளிகளும், புதர்ச் செடிகளும் கொண்டது. இப்பாலைவனத்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 250–350 mm (9.8–13.8 அங்) ஆகும். இப்பாலைவனத்தின் மேற்கு எல்லையில் ஜிகலோங் சிற்றூர் உள்ளது. இங்கு மர்ட்டு மக்கள்[4], பரமங்கூர் மற்றும் புன்மு எனும் ஆத்திரேலியப் பழங்குடிகள் வாழ்கின்றனர்.

தாவரங்களும் விலங்குகளும்

தொகு

இப்பாலைவனத்தின் பெரும்பகுதிகள் சிறு குன்றுகளும், புல்வெளிகளும், புதர்ச் செடிகளும் கொண்டது. மேலும் இப்பாலைவனத்தில் தைல மரங்கள், கோரிம்பியா சிப்பேன்டேலி சிறு மரங்கள் மற்றும் அகாசியா செடிகள் வளர்கிறது. பல்லி மற்றும் பறவையினங்கள் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Diamantina, Outback (16 February 2011). "History of the Canning Stock Route". diamantina-tour.com.au. Archived from the original on 16 February 2011. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.
  2. Van Etten, Eddie John (June 2020). "The Gibson, Great Sandy, and Little Sandy Deserts of Australia". In Michael I. Goldstein; Dominick A. DellaSala (eds.). Encyclopedia of the World's Biomes. Elsevier. pp. 152–162. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-0-12-409548-9.11967-0. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780128160978. S2CID 202470502 – via ResearchGate.
  3. Karlamilyi National Park
  4. "Jigalong". indigenous.gov.au.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு