சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம்
(சிறி ராமச்சந்திரா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக்கழகம் (SRMC & RI), தற்போது ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம் (SRU), சென்னையின் போரூரில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியாகும். இந்த நிறுவனம் செப்டம்பர் 11, 1985இல் இராமசாமி உடையாரின் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி & உடல்நல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. செப்டம்பர் 1994இல் பல்கலைக்கழக மானியக் குழு 1956 சட்டத்தின் பிரிவு மூன்றின்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. இதில் எட்டு கல்லூரிகளும், 45 மருத்துவத் துறைகளும் உள்ளன. 3,500 மாணவர்களுக்கு 92 பாடத்திட்டங்களில் மருத்துவக் கல்வி வழங்குகின்றது.
குறிக்கோளுரை | உயர் கல்வியில் உயர் தகைமைகள் Higher Values in Higher Education |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1985 |
நிதிக் கொடை | $24,717,000 |
நிருவாகப் பணியாளர் | 1,020 |
பட்ட மாணவர்கள் | 2,500 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 500 |
அமைவிடம் | , , |
வளாகம் | போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா நகர் வளாகத்தில் 175 ஏக்கர்கள் (0.71 km2) பரப்பில் 123 கட்டிடங்கள் |
இணையதளம் | www.srmc.edu |