சிறீபாலா கே. மேனன்
சிறீபாலா கே மேனன் (Sreebala K. Menon) என்பவர் ஒரு மலையாளி எழுத்தாளர் மற்றும் திரைப்படப் படைப்பாளி ஆவார். இவரது 19, கேனால் ரோடு என்ற நூலுக்காக 'சிறந்த நகைச்சுவை எழுத்து' என்ற பிரிவில் 2005 ஆம் ஆண்டு கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். மாத்ருபூமி புக்ஸ் மூலம் 'ஸ்லைவியாப்ளாத்தின் மாஸ்டர் பீஸ்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் இவரது முதல் திரைப்படமான லவ் 24x7 என்ற படம் இவருக்கு கேரள அரசு திரைப்பட விருதையும், ராமு காரியத் விருதையும் (சிறந்த அறிமுக இயக்குனர் 2015) பெற்றுத்தந்தது.[1] [2] இவர் ஏசியாநெட் நியூசின் மூத்த செய்தி ஆசிரியரான ஜிம்மி ஜேம்சை மணந்தார்.
சிறீபாலா கே. மேனன் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
கல்வி | சி-டிஐடி, திருவனந்தபுரம் |
பணி |
|
அறியப்படுவது | கேரள அரசி திரைப்பட விருது கேரள சாகித்திய அகதெமி விருது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 19, கேனல் ரோட், சிவியாபிளதிண்டே மாஸ்டர் பீஸ்,
பந்திபோஜனம் (குறும்படம்) லவ் 24x7 (திரைப்படம்) |
கல்வி
தொகுசிறீபாலா சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள சி-டிஐடியில் அறிவியல் மற்றும் மேம்பாட்டு தகவல் தொடர்பு பயிற்சி பெற்றார். [2]
திரைப்பட வாழ்க்கை
தொகுசிறீபாலா கே.மேனன் இயக்கிய லவ் 24x7 திரைப்படத்தில் திலீப் மற்றும் அறிமுக நாயகி நிகிலா விமல் முக்கிய வேடங்களில் நடிக்க, சுகாசினி, ச்சி குமார், லீனா மற்றும் சீனிவாசன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். லவ் 24x7 என்பது சிறீபாலா எழுதிய காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் கேரள அரசின் திரைப்பட விருதையும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான ராமு காரியத் விருதையும் 2015 ஆம் ஆண்டு பெற்றது [3]
2009 இல் சிறீபாலாவின் 20 நிமிட குறும்படமான பந்திபோஜனம், படத்தில் சாதியைக் கையாண்டதற்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். [4] [5] படத்தின் கருப்பொருள் உணவு பற்றிய பல்வேறு கருத்துகளைக் கொண்டதாக உள்ளது; நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் உணவு, ஒரு சாதியினருக்கு தீண்டக்கூடாத உணவு, ஆனால் மற்றொரு இனத்தவருக்கு சுவையான உணவு, கூட்டாகச் சமைத்து உண்ணக்கூடிய சமூக விருந்து. இவரது குறும்படம் ஜர்னி ஃப்ரம் டார்க்னஸ் டு லைட் 2005 ஆம் ஆண்டு எபிலிட்டி ஃபெஸ்டில் மூன்றாம் பரிசைப் பெற்றது [6] [7] சிறீபாலா மேனன் இயக்குநர் சத்யன் அந்திகாட்டுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
சர்ச்சை
தொகு2004 ஏப்ரல் 28 இல், சிறீபாலா தனது அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்போர் சங்க அலுவலகப் பணியாளர்கள் தன் தனிப்பட்ட வாழ்வில் நுழைந்து துன்புறுத்துவதாக கூறி அவர்களுக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்தை (SWC) அணுகினார். [8] இவர் தனித்து வாழும் பெண் என்பதால், இவரது அடுக்ககத்துக்கு வருபவர்கள் தங்கள் பெயரை ஒரு புத்தகத்தில் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இது தனது தனியுரிமையை மீறுவதாக இவர் கருதினார்.
இந்த நிகழ்வு வாடகைதாரரின் தனியுரிமை மற்றும் பணிபுரியும் பெண்கள் தங்க வீடு தேடும்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விவாதத்தைத் தூண்டியது. இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய இயக்குநர் வி. சாந்தாராம் கூறுகையில், "இதில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். அரசியலமைப்பு பெண்களுக்கு சிறப்புப் பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் எந்த விதமான உடல் அல்லது வாய்மொழி துன்புறுத்தல்களையும் காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம். இதுபோன்ற அநியாயத்தை பெண்டும் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்றார். [9]
திரைப்படவியல்
தொகு- ஜர்னி பர்ம் டார்க்னஸ் டூ லைட் (2005) - குறும்படம்
- பந்திபோஜனம் (2009) – குறும்படம்
- லவ் 24x7 (2015) - அறிமுகப் படம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malayalam cinema, Kerala cinema, Malayalam cinema news". கேரளம்.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
- ↑ 2.0 2.1 "Winning an award for her wit". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3217731.ece. பார்த்த நாள்: 4 April 2015.
- ↑ "'Charlie' Dominates Kerala State Film Awards 2015". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ "Food for thought". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
- ↑ "Her take on caste and more". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 22 December 2014. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
- ↑ Prize Winning Films – Ability Fest 2005
- ↑ Indo-Asian News Service. "One-minute films on disability win accolades" இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150425123012/http://www.hindustantimes.com/artsandentertainment/one-minute-films-on-disability-win-accolades/article1-34304.aspx.
- ↑ staff (29 April 2004). "Woman complaints against residents' association office-bearers". தி இந்து. Archived from the original on 23 June 2004. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
- ↑ staff (28 June 2004). "Single and OUT!". தி இந்து. Archived from the original on 30 August 2004. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.