சிறீபுருசன்

சிறீபுருசன் (726–788), என்பவன் மேற்கு கங்க மரபைச்சேர்ந்த மன்னன் இம்மரபில் ஏறக்குறைய 62 ஆண்டுகள் ஆட்சிசெய்தவன். இவனுக்கு முன் ஆட்சியில் இருந்த முதலாம் சிவமாறனின் பேரன். இவன் கங்க மரபில் மிகச்சிறப்பாகப் பேசப்படும் மன்னனாவான்.

எழுதிய நூல்

தொகு

இவன் சிறந்த கல்விமான். யானைப்போரில் வல்லவன்.கஜசாத்திரம் என்ற நூலை எழுதியவன்.[1]

அரச உறவுகள்

தொகு

பாண்டியன் பராங்குசன் கங்க நாட்டின் மீது படையெடுத்து வந்தான். சிறீபுருசன் சாளுக்கியரின் மேலாட்சியை ஏற்றிருந்ததால் இவனுக்கு ஆதரவாக சாளுக்கியரும் போர்க்களத்திற்கு வந்தனர். கி.பி.740 அல்லது 741ல் வேண்பை என்ற இடத்தில் நடந்த போரில் பாண்டியன் பராங்குசன் பெருவெற்றி பெற்றான். இப்போருக்கு பிறகு பாண்டிய பேரரசு தென்னாட்டின் உச்ச பேரரசாக மாறியது. இதன் பிறகு கங்கர்கள் பாண்டியரின் மேலாட்சியை ஏற்றுக்கொண்டு, அவர்களின் நேசத்திற்கு அடையாளமாகச் சிறிபுருசன் புதல்வியை பாண்டிய இளவரசன் பராந்தகனுக்கு மணமுடித்தனர். [2][3]

பட்டப் பெயர்கள்

தொகு

கட்டாணை, மகாராசாதிராசன், பரமேசுவரன், பிருத்துவி கொங்கணி, கொங்கணி முத்தரசன், பெருமானடி சிறீவல்லபன், ரணபஜனன் போன்ற பட்டப் பெயர்களைச் சிறீபுருசன் பெற்றிருந்தான்.

குறிப்புகள்

தொகு
  1. M.V.Krishna Rav, The Gangas of Talakad,p.59
  2. தென்னாட்டு போர்க்களங்கள் - க. அப்பாத்துரை.
  3. தகடுர் வரலாறும் பண்பாடும் - இரா.இராமகிருட்டிணன். பக்.171
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபுருசன்&oldid=2488193" இலிருந்து மீள்விக்கப்பட்டது