சிறீரஞ்சினி (நடிகை)
மங்கலகிரி சிறீரஞ்சனி, (தெலுங்கு: శ్రీరంజని) (1927–1974) என்பவர் திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீரஞ்சனி என்பவர் இவருடைய சகோதரியாவார். எம். மல்லிகார்ஜுனா ராவ் என்ற இயக்குனரின் தாய் ஆவார்.
1927 இல் ஆந்திரப் பிரதேசத்தில் நரசசுப்பேட்டை தாலுக்காவில் முருகிபியூடி என்ற இடத்தில் பிறந்தவர்.[1] 1930 களில் சிறந்த பிரபல பாடகியாக அறியப்படுகிறார். இவர் குரலில் வெளிவந்த கிராம்ஃபோன் கம்பெனி ஆஃப் இந்தியா தயாரிப்பு ஆல்பங்கள் மற்றும் ஒலிநாடாக்கள் மிகவும் பிரபலமாகின. இவர் கிருஷ்ண விலாச நாடக சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் நடித்துள்ளார். இது இந்து தொன்மவியல் நாடதமாகும். கிருஷ்ணா, அபிமன்யூ, சத்யவான் போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
தெலுங்குத் திரைப்பட உலகில் 1934 இல் இந்து சமய இதிகாசமான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த லவகுசா திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார்.
ஆதாரங்கள்
தொகு- Nata Ratnalu, Mikkilineni Radhakrishna Murthy, Second edition, 2002.
- Luminaries of 20th Century, Potti Sreeramulu Telugu University, 2005.