சிறீ கொம்மினேனி

சிறீ கொம்மினேனி (பிறப்பு கொம்மினேனி சீனிவாச சக்ரவர்த்தி) (13 செப்டம்பர் 1966 - 18 ஏப்ரல் 2015) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணி பாடகரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். தெலுங்குத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்ற இவர்,[1][2][3] மூத்த இசையமைப்பாளர் கே. சக்ரவர்த்தியின் மகனாவார். 1995ஆம் ஆண்டு ஜெமினி ஜெமினி தொலைக்காட்சியில்]] ஒளிபரப்பப்பட்ட "அந்தாக்சரி" என்ற பாடல் நிகழ்ச்சியின் முன்னணி தொகுப்பாளராக இருந்தார்.

சிறீ
பிறப்பு(1966-09-13)13 செப்டம்பர் 1966
பிறப்பிடம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு18 ஏப்ரல் 2015(2015-04-18) (அகவை 48)
ஐதராபாத்து, இந்தியா
இசை வடிவங்கள்புதிய பானி
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், இசை இயக்குநர்
இசைக்கருவி(கள்)குரலிசை, கித்தார், விசைப்பலகை
இசைத்துறையில்1966–2015

2005இல் வெளியான சக்ரம் திரைப்படத்திலிருந்து "ஜகமந்தா குடும்பம் நாதி" படத்திற்காக இவர் குரல் கொடுத்திருந்தார்.[2] மணி மணி, லிட்டில் சோல்ஜர்ஸ், சிந்தூரம், அனகனகா ஒக ரோஜு, ஆவிட மா ஆவிட, காயம், அம்மூரு போன்ற படங்களுக்கான வெற்றிப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.[1][2][3][4]

கல்வி

தொகு

இவர், மணிப்பால் தொழிற்நுட்பக் கழகத்தில் தொழில்துறை பொறியியலில் பட்டம் பெற்றவர்.[1][2] [3]

இறப்பு

தொகு

சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக ஏப்ரல் 18, 2015 அன்று ஐதராபாத்தில் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Sri Kommineni". Tolly Movies. Archived from the original on 18 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 "ఇండస్ట్రీ నన్ను అర్థం చేసుకోలేదు! – శ్రీ". Sakshi.com. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  3. 3.0 3.1 3.2 "Telugu Cinema Etc". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  4. Cinemas, Telugu. "Music Director Sri Super Hit Songs". Telugucinemas.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  5. Cinemas, Telugu. "Music Director Sri is No More". Telugucinemas.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_கொம்மினேனி&oldid=4165803" இலிருந்து மீள்விக்கப்பட்டது