சிறீ பெத்தம்மா தாய் கோயில்

சிறீ பெத்தம்மா தாய் கோயில் (Sri Peddamma Thalli Temple) அல்லது பெத்தம்மா தல்லி குடி என்பது தெலங்காணாவின் ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். [1] [2] போனலு பண்டிகை காலத்தில் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது. [3]

சிறீ பெத்தம்மா தாய் கோயில்
பெத்தம்மா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலங்காணா
அமைவு:ஜுபிளி ஹில்ஸ், ஐதராபாத்து
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்தியா
பெத்தம்மா கோயில் நுழைவு வாயில்

மறைந்த முன்னாள் அமைச்சர் பி.ஜனார்த்தனாரெட்டியால் புனரமைக்கப்பட்ட இந்தக் கோயில் வளாகத்தில் ஐந்து மாடி கருவறை, ஏழு மாடி இராஜகோபுரம், திருமண மண்டபம் மற்றும் தங்குமிடங்கள் உள்ளன. 1984ஆம் ஆண்டு முதல் அம்பி விருபாக்சர்களால் ஒரு புதிய சிலை நிறுவப்பட்டதிலிருந்து இந்த கோயில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கோயில் வளாகத்தில் உயர்ந்த கொடிக் கம்பம் உள்ளது.

திருவிழா

தொகு

கோயிலின் ஐந்து முக்கிய திருவிழாக்கள் மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடப்படுகின்றன. இவை பிரம்மோத்சவங்கள், போனலு, சாகம்பரி திருவிழாக்கள், விஜயதசமி, சிரணவராத்திரம். ஐதராபாத்து மற்றும் சிக்கந்தராபாத் இரட்டை நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்டிகைகளின் போது அதிகளவில் கோவிலுக்கு வருகிறார்கள்.

சொற்பிறப்பியல்

தொகு

பெத்தா மற்றும் அம்மா என்ற இரண்டு தனித்தனி சொற்களைக் கொண்ட "பெத்தம்மா" என்ற வார்த்தையின் அர்த்தம் 'பெரிய தாய்' என்பதாகும். கிராம தெய்வங்களின் 11 வடிவங்களில் ஒன்றான இவர் மிக உயர்ந்தவர் என்று கருதப்படுகிறார்.

 
பெத்தம்மா கோயில் - ஐதராபாத்து

திரையுலகம்

தொகு

கோயிலைச் சுற்றி திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும், அரங்கங்களும் இருப்பதால், முகூர்த்த நாட்களிலும் திரைப்பட படப்பிடிப்பு ஆரம்ப நாட்களிலும் இங்கு சிறப்பு பூசைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நிலம் ஆக்கிரமிப்பு

தொகு

இந்த கோவிலில் பெரிய தோட்டங்கள் உள்ளன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் ஐதராபாத்து நகரம் வேகமாக வளர்ந்து வருவதால், கோயிலின் அசையா சொத்துக்கள் மற்ற பண்டைய ஆலயங்களைப் போலவே மெதுவாக ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் நழுவுகிறது.

திறந்திருக்கும் நேரம்

தொகு

பெத்தம்மா கோயில் காலை 6 மணி முதல் 1 மணி வரையும், திங்கள் முதல் சனி வரை மாலை 3 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் 6 முதல் 8:30 வரை திறக்கப்படுகிறது.[4]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Ex-serviceman with gun creates flutter at Peddamma temple". The Hindu.
  2. "Anniversary celebrations at Peddamma temple". The Hindu.
  3. "Ecstasy marks Bonalu at Mahankali temple". The Hindu.
  4. "Peddamma Temple Timings".