சிறுகுரீஇ உரை
சிறுகுரீஇ உரை என்னும் நூல் மறைந்துபோன தமிழ் நூல்களில் ஒன்று. இதனைப் பேராசிரியர் தம் தொல்காப்பிய உரையில் [1] குறிப்பிடுகிறார. இது பொய் அல்லாத உண்மை நிகழ்வுகளுக்கு நகைச்சுவை கூட்டி எழுதப்பட்ட நூல் என அவர் குறிப்பிடுகிறார். [2] இத்தகைய நூல்களைத் தொல்காப்பியம் 'பொருளொடு புணர்ந்த நகைமொழி' எனக் குறிப்பிடுகிறது. [3] இது போல் அமைந்த மற்றொரு நூல் தந்திர வாக்கியம்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ பேராசிரியர் (நூல் பதிப்பு 1959). தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் பேராசிரியர் உரை. சென்னை 1: சைவ சித்தாந்த நூறுபதிப்புக் கழகம். p. 389.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: location (link) - ↑ "பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது - பொய் எனப்படாது மெய் எனப்படும் நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலை. அதுவும் உரை எனப்படும். அவையாவன சிறுகுரீஇயுரையும் தந்திரவாக்கியமும் போல்வன எனக் கொள்க. இவற்றுள் சொல்லப்படும் பொருள் பொய் எனப்படாது. உலகியலாகிய கதைத் தோற்றம் என்பது".
- ↑
பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பா இன்று எழுந்த கிளவி யானும்
பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று
உரைவகை நடையே நான்றஃகு என மொழிப (தொல்காப்பியம் 3-485)