சிறுகுறுந்தொழுவர்
சங்க காலத்தில் வீட்டுப்பணிகளுக்கென அமர்த்தப்பட்டவர்கள் சிறுகுறுந்தொழுவர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலேயே இருந்து சிறு சிறு பணிகளைச் செய்துள்ளனர். இதனை நெடுநல்வாடை எடுத்துரைக்கிறது. இவர்கள் இருப்பதனாலேயே வீட்டில் இருக்கும் மகளிர், முழுவலிமாக்கள் எனப்படும் கீழான செயல்களில் ஈடுபடுவோரால் எத்தகு தீங்கும் இல்லாமல் இருந்துள்ளனர்.