சிறுநீர்மானி

சிறுநீரடர்த்திமானி அல்லது சிறுநீர்மானி (Urinometer, யூாினோமீட்டா்) என்பது சிறுநீாின் குறிப்பிட்ட ஈா்ப்புத் தன்மையைக் கண்டறியக்ககூடிய ஒரு எளிய கருவியாகும்.[1]

ஒரு வகை சிறுநீர்மானி

கருவியின் அமைப்பு

தொகு

சிறுநீர்மானி கருவியில் ஒரு மிதவை, எடை மற்றும் தண்டுப் பகுதியைக் கொண்டது. இதில் மிதவை என்பது காற்று நிரப்பப்பட்ட கண்ணாடிக் குழாய் ஆகும். இதன் இடது முனையில் எடையும், வலது முனையில் தண்டுப் பகுதியும் உள்ளது. இடப்பக்க குமிழியினுள் சிவப்பு நிற திண்மக் குண்டுகள் பசையினால் பதிக்கப்பட்டுள்ளது. வலது புற தண்டுப்பகுதி நீண்டு இதனுள் நுண்ணிய அளவீடுகள் குறிக்கப்பட்டுள்ளது. இக்கருவியை சிறுநீா் உள்ள குழாயில் வைக்கும் போது சிறுநீரானது கருவியைத் தொடும் போது சிறுநீாின் குறிப்பிட்ட அடர்த்தியை அளவிட முடியும்.

இந்த சிறுநீர்மானி கருவியானது மருத்துவப் பாிசோதனைக் கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Urinometer". warwick.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீர்மானி&oldid=3527940" இலிருந்து மீள்விக்கப்பட்டது