சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம்

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (National Commission for Minority Educational Institutions (NCMEI) (சுருக்கமாக:NCMEI) இந்தியாவில் மதச்[1] சிறுபான்மையினரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்க நிறுவப்பட்டது.[2] இது தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சட்டம் (NCMEI சட்டம்), 2004ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 30, வழங்கப்பட்டுள்ளபடி, மத சிறுபான்மையினர் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவ மற்றும் நிர்வகிக்கும் உரிமைகளை உறுதி செய்கிறது.[3] மொழிச் சிறுபான்மையினர் NCMEI சட்டம், 2004ன் வரம்பிற்குள் வரமாட்டார்கள்.

வரலாறு

தொகு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (NCMEI) தேசிய பொது குறைந்தபட்ச திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத சிறுபான்மையினரின் நலனுக்காக நிறுவப்பட்டது. இந்திய அரசு நவம்பர் 2004 இல் ஒரு ஆணையின் மூலம் இந்த ஆணையத்தை நிறுவியது. சனவரி 2005 இல் இயற்றிய சட்டத்தின்[4] மூலம் இந்த ஆணையம் செயல்படுகிறது.

ஆணையத்தின் அமைப்பு

தொகு

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரின் தலைமையில் இந்த ஆணையம் உள்ளது. மூன்று உறுப்பினர்கள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அவர்களும் ஒரு மத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் மற்றும் "மேன்மை, திறன் மற்றும் ஒருமைப்பாடு கொண்ட நபர்களாக" இருக்க வேண்டும்.

அதிகாரங்கள்

தொகு
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 30 வது பிரிவில் கூறப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் கல்வி உரிமைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பறிக்கும் எந்தவொரு விஷயத்திலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரைகளை வழங்கும்.[5]
  • சிறுபான்மையினரின் கல்வி தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் அல்லது கேள்விகள் குறித்து மத்திய அரசு அல்லது எந்த மாநில அரசுகளுக்கு சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் அறிவுறுத்துகிறது.
  • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம என்பது சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரை -நீதித்துறை அமைப்பாகும். ஆணையம் முக்கியமாக 3 பாத்திரங்களை வகிக்கிறது: 1) தீர்ப்பளிக்கும் செயல்பாடு, 2) ஆலோசனை செயல்பாடு மற்றும் 3) பரிந்துரை செயல்பாடு.
  • சிறுபான்மை கல்வி நிறுவனங்களை இணைப்பது தொடர்பான விஷயங்களில் ஆணையத்தின் முடிவே இறுதியானது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "No minority status to educational institutions on Linguistic basis". www.pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-10-07.
  2. "NCMEI". NCMEI. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  3. Wikisource:Constitution of India/Part III#Article 30 .7BRight of minorities to establish and administer educational institutions.7D
  4. "The National Commission for Minority Educational Institutions Act, 2004 (2 of 2005)" (PDF). Archived from the original (PDF) on 2022-11-26. பார்க்கப்பட்ட நாள் 2022-11-26.
  5. "About the National Commission for Minority Educational Institutions". National Commission for Minority Educational Institutions.{{cite web}}: CS1 maint: url-status (link)