சிறுமுரண் இரும்பியக் காந்தவியல்

சிறுமுரண் இரும்பியக் காந்தவியல் (Ferrimagnetism) என்பது சில திண்மப் பொருள்களில் காணப்படும் ஒருவகையான மென்மையான நிலைக்காந்தவியல். இரும்பில் உள்ள இரும்பணுக்களின் காந்தக்கூறுகள் ஒரே திசையில் நிற்கும். ஆனால் சிறுமுரண் இரும்பியக் காந்தம் என்னும் பொருளில் உள்ள அணுக்களின் காந்தப்புலத்தின் திசை எதிர் எதிராக நிற்கக்கூடியன. சில அணுக்களின் காந்தப்புலம் ஒரு திசையிலும் வேறு சில அணுக்களின் காந்தப்புலம் எதிர் திசையிலும் தற்செயலாய் நிற்கும். என்றாலும் ஒரு குறிப்பிட்ட கியூரி வெப்பநிலைக்குக் கீழே, இந்த எதிரெதிர் நிற்கும் காந்தக்கூறுகள் ஓரளவுக்கு ஒரே திசையில் காந்தத்தன்மை காட்டக்கூடியவை. மேக்னட்டைடு (magnetite) , இரும்பு ஆக்சைடு ( Fe3O4) போன்றவை இவ்வகையான சிறுமுரண் இரும்பியக் காந்த வகையை சேர்ந்தவை. இவ்வகை காந்தத் தன்மையை நோபல் பரிசாளர் இலூயிசு நீல் 1948 இல் கண்டுபிடித்தார்.[1]

சிறுமுரண் இரும்பியக் காந்தவியலில் காந்தக்கூறுகள் நிற்கும் ஒழுங்கு

வெப்பநிலையால் ஏற்படும் விளைவு

தொகு
 
➀ காந்தத் திருப்பங்கள் (magnetic moments) எதிரெதிர் நின்று ஈடுகட்டும் நிலைக்கு கீழே உள்ள வெப்பநிலையில் மெல்லிய காந்தத்தன்மை காட்டும்(சிறுமுரண் இரும்பியக் காந்தம்). ➁ காந்தத் திருப்பங்கள் சரி ஈடாக நிற்கும் நிலை. மொத்த காந்தத் திருப்பம் சுழி. ➂ கியூரி வெப்பநிலைக்கு மேல் பொருள் காந்தத்தன்மையை அறவே இழக்கின்றது.

சிறுமுரண் இரும்பியக் காந்தமும், இரும்புக்காந்தம் போலவே கியூரி வெப்பநிலைக்குக் கீழே தானாகவே காந்த ஒழுங்கு பெற்று இருக்கும், ஆனால் இதில் எதிர் திசையில் நிற்கும் காந்தக்கூறுகளும் உண்டு. கியூரி வெப்பநிலைக்குக் கீழே இப்பொருளில் உள்ள படிகக்கூறுகளின் காந்தத் திருப்பம் (magnetic moment) சரியாக எதிர் எதிராக நின்று ஈடாக நிற்கும் ஒரு நிலை (magnetization compensation point) உண்டு. இது தவிர கோண உந்தம் ஈடுசெய் புள்ளி என்றும் ஒரு நிலை உண்டு. இப்படி உள்ள நிலையால்தான் விரைவாக காந்தத் திசைகளை மாற்ற இயலுகின்றது (இது கணினியும் மிகுவிரைவு நினைவுத் தரவு மாற்றங்களுக்கு உதவுவது)[2]

பண்புகள்

தொகு

சிறுமுரண் இரும்பியக் காந்தப் பொருள்கள் (Ferrimagnetic materials) பொதுவாக உயர் மின் தடைமம் கொண்டதாகவும் திசைக்கு ஏற்றவாறு பண்பு மாறுபடும் தன்மை உடையதாகவும் இருக்கும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. L. Néel, Propriétées magnétiques des ferrites; Férrimagnétisme et antiferromagnétisme, Annales de Physique (Paris) 3, 137-198 (1948).
  2. C. D. Stanciu, A. V. Kimel, F. Hansteen, A. Tsukamoto, A. Itoh, A. Kirilyuk, and Th. Rasing, Ultrafast spin dynamics across compensation points in ferrimagnetic GdFeCo: The role of angular momentum compensation, Phys. Rev. B 73, 220402(R) (2006).