சிறு பனிக்கட்டிக் காலம்

சிறுபனிக்கட்டிக் காலம்

தொகு

சிறுபனிக்கட்டிக் காலம் என்பது மத்திய வெப்ப காலத்தில் ஏற்பட்ட சிறு உறைபனிக்காலம் ஆகும். ஆனாலும் இதனை முழுமையான பனிக்கட்டிக் காலம் என்று கூற முடியாது. "சிறுபனிக்கட்டிக் காலம்" என்னும் வார்த்தையை 1939ல் அறிவியலாளர் 'பிராங்கோசிஸ் மேத்திஸ்'( François E. Matthes) என்பவர் அறிமுகப்படுத்தினார். சிறுப்பனிக்கட்டிக் காலத்தின் காலம் 16ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரையும் என்றும், கி.பி.1350 முதல் கி.பி.1850 வரை என்ற இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் காலநிலை கணக்கீட்டாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் அந்தந்த பகுதி நிலவரங்களை கொண்டு இந்த கால கணக்கீட்டுடன் உடன்பட மறுக்கின்றனர். அமெரிக்காவின் நாசா சிறுப்பனிக்கட்டிக் காலத்தை கி.பி.1550 முதல் கி.பி.1850 வரை என்று வரையறுத்துள்ளது. மேலும், இந்த காலத்தை மூன்று இடைவெளிகளாக பிரித்துள்ளது. அவை கி.பி.1650, கி.பி.1770, கி.பி.1850 ஆகிய ஆண்டுகள் ஆகும். அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்ற மூன்றாம் மதிப்பீட்டு குழுவின் அறிக்கையின்படி சிறுபனிக்கட்டிக்காலத்தின் பகுதிகள் கண்டுணரப்பட்டுள்ளன. இதன் பகுதிகள் பெரும்பாலும் வட அரைக்கோளம் ஆகும். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. 1)சூரிய கதிர்வீச்சில் ஏற்பட்ட மாற்றங்கள்,2) எரிமலை வெடிப்புகள், 3)கடல் நீரோட்டம்,4) உலகளாவிய காலநிலை மாற்றம்,5) மனிதர்களின் எண்ணிக்கை குறைவு.

பாதிக்கப்பட்ட பரப்பு

தொகு

அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்ற மூன்றாம் மதிப்பீட்டு குழுவின் அறிக்கையின்படி(TAR) பரப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. மலைகளில் ஏற்பட்ட பனிப்பாறைகளின் வயதை கார்பன் கால கணக்கீடு மூலம் கணக்கிட்டு சிறுபனிக்கட்டிக்காலத்தின் பரப்பு கண்டுணரப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பாவின் பல பகுதிகளும், அலாஸ்கா, நியூசிலாந்து, மற்றும் படகோனியாவும் அடங்கும்.

கால கணக்கீடு

தொகு

மிகச்சரியான காலம் தெளிவாக அறியப்படவில்லை. ஆனாலும் வரிசைக்கிரமமான குறைந்தபட்ச காலநிலை மாற்ற விவரங்கள் இதன் காலத்தை அறிய உதவுகிறது. 13ம் நூற்றாண்டில் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் பனிக்கட்டி பாறைகள் உருவாயின. மேலும், கிரீன்லாந்து, பப்பின் தீவுகள், இஸ்லாந்து ஆகிய பகுதிகளில் மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் சிறுபனிக்காலம் கி.பி.1270க்கும் 1300க்கும் இடையில் தொடங்கியதாக சுட்டுகின்றன. சிறுபனிக்காலத்தின் காலத்தை காட்டும் குறிப்புகள்: • 1250ல் அட்லாண்டிக் பனிக்கட்டி வளர்தல், • கார்பன் வயது கணக்கீடு மூலம் சிறுபனிக்காலத்தில் இறந்த தாவரங்களின் வயதை கணக்கிட்டதில் சிறுபனிக்கால தொடக்கம் கி.பி.1275 முதல் 1300 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. • கி.பி.1300ல் வடக்கு ஈரோப்பாவில் கோடைக்காலம் இன்மை. • கி.பி.1315ல் அதிக மழை மற்றும் பெரும் பஞ்சம். • கி.பி.1550ல் உலகளவில் பனிப்பாறை விரிவாக்கம். • கி.பி.1650ல் குறைந்த அளவிலான காலநிலை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதியில் சிறுப்பனிக்கட்டிக்காலம் முடிந்தது.

வட அரைக்கோளம்

தொகு

ஈரோப்பா மற்றும் வடஅமெரிக்கா

தொகு

சிறுபனிக்கட்டிக் காலத்தில் வட அமெரிக்காவிலும் ஈரோப்பாவிலும் அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டது. 17ம் நூற்றாண்டின் பாதியில் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் இருந்த கிராமங்களும் பண்ணைகளும் பனிப்பொழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டன. பிரிட்டனிலும் நெதர்லாந்திலும் பல கணவாய்களும் ஆறுகளும் உறைந்தன. அது பனிச்சறுக்கு விளையாடவும், பனிக்கால விழாக்களை கொண்டாடவும் போதிய அளவாக இருந்தது. தேம்ஸ் நதி முதன்முதலாக 1607ம் ஆண்டு உறைந்தது. இறுதியாக 1814ம் ஆண்டு உறைந்தது. இந்த உறைதலால் ஆற்றின் கரைகளும் ஆழமும் நீரோட்டமும் மாறிப்போயின. மேலும் கோல்டன் ஹார்ன் மற்றும் போஸ்பரஸ் ஆகியவை 1622ல் உறைந்தன (இவை இரண்டும் இஸ்தான்புல்லில் உள்ள குறுகிய கடல் பகுதி ஆகும்). கி.பி.1658ல் ஸ்வீடன் இராணுவம் கிரேட் பெல்ட் பாலத்தை கடந்து கோப்பென்ஹன்னை(டென்மார்க் தலைநகரம்) கைப்பற்ற சென்றது. மேலும் தீவுகள் அதிகளவில் பனியால் சூழப்பட்டன. மேலும் துறைமுகங்கள் பலவும் உறைந்து போனதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவால் விளைநிலங்கள் மூடப்பட்டமையால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் இஸ்லாந்தின் மக்கள் தொகை பாதியாக குறைந்தது.

ஈரோப்பிய ஓவியங்களில் குளிர்கால சித்தரிப்புகள்

தொகு

ஈரோப்பிய ஓவியங்களில் குளிர்கால சித்தரிப்புகள் காணப்படுகின்றன. இது குறித்து வில்லியம் ஜேம்ஸ் பர்ரோஸ்(William James Burroughs) பல ஆய்வுகள் செய்தார். இந்த ஓவியங்களில் குளிர்கால சித்தரிப்புகள் பெருமளவில் காணப்படுகின்றன. பனிக்கால ஓவியங்களில் 'பீட்டர் பெர்கல் எல்டரின்' புகழ்பெற்றவை.

தெற்கு அரைக்கோளம்

தொகு

ஆப்பிரிக்கா

தொகு

தெற்கு ஆப்பிரிக்காவின் மலாவி ஏரியானது 1570 முதல் 1820 வரை பலமுறை உறைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டார்டிகா

தொகு

கிரட்ஸ் எட் அல் அவர்கள் மேற்கு அண்டார்டிகாவின் பனி மாதிரியையும், கிரீன்லாந்தின் பனி மாதியையும் ஒப்பிட்டு பார்த்தார். இதன் மூலம் உலகம் முழுவதும் சிறுப்பனிக்கட்டிக்காலம் விரவி இருந்தது என அறிய முடிகிறது.

ஆஸ்திரேலியா

தொகு

ஆஸ்திரேலியாவில் இருந்து சிறுப்பனிக்கட்டிக்காலம் குறித்த மிக விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் விக்டோரியா ஏரியின் பதிவுகளில் இருந்து ஓரளவு அறிய முடிகிறது. ஆனாலும் குறைந்த அளவேயான தகவல்களும் கோடை குறித்தே அதிகம் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆவணங்கள் கூறும்படி 17ம் நூற்றாண்டு மிக குளிராக இருந்ததாக தெரிகிறது.

பசிபிக் தீவுகள்

தொகு

பசிபிக் தீவுகளின் வரலாற்று ஆவணங்கள் தரும் தகவல்கள்படி இருமுறை கடல்மட்டம் குறைந்ததாக தெரிகிறது. அது கி.பி.1270 முதல் கி.பி.1475 வரையான காலத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது கார்பன் காலக்கணக்கீடு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து

தொகு

நியூசிலாந்தின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள தெற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பிரன்ஸ் ஜோசப் பனிப்பாறையானது சிறுப்பனிக்கட்டிக்காலத்தில் வளர்ந்து அதன் உட்சபட்ச உயரத்தையும் அளவையும் எட்டியது.

தெற்கு அமெரிக்கா

தொகு

கி.பி.1550ல் இருந்து கி.பி.1800 வரை சிறுப்பனிக்கட்டிக்காலம் தெற்கு அமெரிக்காவில் இருந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

காரணங்கள்

தொகு

அறிவியலாளர்கள் சிறுப்பனிக்கட்டிகாலம் ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிந்துள்ளனர்.அவை, 1)பூமியின் சுழற்சி மாற்றம், 2)குறைந்த சூரிய ஒளி, 3)அதிக எரிமலை நிகழ்வுகள், 4)கடல் நீரோட்ட மாற்றம், 5)உலகளாவிய காலநிலை மாற்றம், 6)மனித எண்ணிக்கை குறைந்ததால் ஏற்பட்ட காடுகள் பெருக்கம்.

பூமியின் சுழற்சி மாற்றம்

தொகு

பூமியின் சுழற்சி இயக்கங்கள் காரணமாக கடந்த 2000 ஆண்டுகளாக பூமியின் வடதுருவத்தில் பனிப்பொழிவு இருந்து வந்தது. அது சிறுபனிக்கட்டிக்காலத்தில் அதிகமாக இருந்தது.

அதிக எரிமலை நிகழ்வுகள்

தொகு

சிறுப்பனிக்கட்டிக்காலத்தில் அதிகளவு எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்தன. ஒரு எரிமலை வெடிக்கும்பொழுது அதில் இருந்து வெளிப்படும் எரிமலை சாம்பலானது பூமியின் வளிமண்டலம் முழுவதும் பரவி சூரியனின் கதிர்கள் பூமியின் மீது விழாதவறு ஒரு போர்வை போல இருந்தது. மேலும் எரிமலை வெடிப்பால் வெளிப்பட்ட சல்பர் ஆனது சல்பர் டை ஆக்சைடாக மாறி வளிமண்டலத்தின் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கை அடைந்த்து. இது சூரியக் கதிர்களை பிரதிபலித்து வெப்பத்தை தடுத்தது.இதனால் புவியில் வெப்பம் குறைந்து பனிப்பொழிவு ஏற்பட்டது. கி.பி.1815ல் இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை வெடித்ததில் வளிமண்டலம் முழுதும் சாம்பல் மயமாக இருந்தது. இதனால் 1816ல் கோடை இல்லாமல் போனது.

குறிப்புகள்

தொகு

^ Emmanuel Le Roy Ladurie (1971). Times of Feast, Times of Famine: a History of Climate Since the Year 1000. Barbara Bray. Garden City, NY: Doubleday. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-374-52122-0. OCLC 164590. Jump up ^ Matthes FE (1939). "Report of the committee on glaciers". Transactions of the American Geophysical Union: 518–23. Matthes described glaciers in the Sierra Nevada of California that could not have survived the hypsithermal, in his opinion; his usage of "Little Ice Age" has been superseded by "Neoglaciation". Jump up ^ Michael Mann (2003). "Little Ice Age" (PDF). In Michael C MacCracken and John S Perry. Encyclopedia of Global Environmental Change, Volume 1, The Earth System: Physical and Chemical Dimensions of Global Environmental Change. John Wiley & Sons. Retrieved 17 November 2012. Jump up ^ Lamb, HH (1972). "The cold Little Ice Age climate of about 1550 to 1800". Climate: present, past and future. London: Methuen. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-416-11530-6. (noted in Grove 2004:4). Jump up ^ Earth observatory (Glossary L–N ed.). USA: Nasa. Jump up ^ "1.4.3 Solar Variability and the Total Solar Irradiance - AR4 WGI Chapter 1: Historical Overview of Climate Change Science". Ipcc.ch. Retrieved 2013-06-24. Jump up ^ "Glossary I-M". NASA. Retrieved 2011-02-28. ^ Jump up to: a b "Climate Change 2001: The Scientific Basis". UNEP/GRID-Arendal. Retrieved 2007-08-02. Jump up ^ AR4 WG1 Section 6.6: The Last 2,000 Years, 2007. Jump up ^ Jones, Philip D. (2001). History and climate: memories of the future?. Springer. p. 154. Jump up ^ According to JM Lamb of Cambridge University the little ice age was already underway in Canada and Switzerland and in the wider North Atlantic region in the thirteenth and fourteenth centuries ^ Jump up to: a b c Miller et al. 2012. "Abrupt onset of the Little Ice Age triggered by volcanism and sustained by sea-ice/ocean feedbacks" Geophysical Research Letters 39, January 31: abstract and link on AGU website (accessed 31 January 2011) ^ Jump up to: a b Was the Little Ice Age Triggered by Massive Volcanic Eruptions? ScienceDaily, Jan. 30, 2012 (accessed 21 May 2012) Jump up ^ "Worldwide glacier retreat". RealClimate. Retrieved 2007-08-02. Jump up ^ Oerlemans, Johannes Hans Oerlemans (2005). "Extracting a Climate Signal from 169 Glacier Records". Science 308 (5722): 675–7. Bibcode:2005Sci...308..675O. doi:10.1126/science.1107046. PubMed. Retrieved 2009-12-25. Jump up ^ Hendy, E.; Gagan, M.; Alibert, C.; McCulloch, M.; Lough, J.; Isdale, P. (2002). "Abrupt decrease in tropical Pacific sea surface salinity at end of Little Ice Age". Science 295 (5559): 1511–1514. Bibcode:2002Sci...295.1511H. doi:10.1126/science.1067693. PubMed. edit Jump up ^ Ogilvie, A. E. J.; Jónsson, T. (2001). Climatic Change 48: 9. doi:10.1023/A:1005625729889. edit Jump up ^ "About INQUA:Quaternary Science (By S.C. Porter)". INQUA. Retrieved 2010-05-06. ^ Jump up to: a b c Jonathan Cowie (2007). Climate change: biological and human aspects. Cambridge University Press. p. 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-69619-7. Jump up ^ Stone, Richard (2004-11-19). "Iceland's Doomsday Scenario?". Science 306 (5700): 1278–81. doi:10.1126/science.306.5700.1278. PubMed. Jump up ^ [1][dead link] Jump up ^ "SVS Science Story: Ice Age". NASA Scientific Visualization Studio. Retrieved 2007-08-02. Jump up ^ "Arquivo de eventos históricos - Página 4 - MeteoPT.com - Fórum de Meteorologia". MeteoPT.com. 2012-07-17. Retrieved 2013-06-24. ^ Jump up to: a b c Lamb, Hubert H. (1995). "The little ice age". Climate, history and the modern world. London: Routledge. pp. 211–241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-12734-3. Jump up ^ Cullen, Karen J. (30 May 2010). Famine in Scotland: The 'Ill Years' of The 1690s. Edinburgh University Press. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7486-3887-1. Jump up ^ Ewanu, Elizabeth; Nugent, Janay (2 November 2008). Finding the Family in Medieval and Early Modern Scotland. Ashgate. p. 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-6049-1. ^ Jump up to: a b Broecker WS (February 2000). "Was a change in thermohaline circulation responsible for the Little Ice Age?". Proc. Natl. Acad. Sci. U.S.A. 97 (4): 1339–42. Bibcode:2000PNAS...97.1339B. doi:10.1073/pnas.97.4.1339. PMC 34299. PubMed. Jump up ^ National Park Service Jump up ^ Cronin, T. M.; Dwyer, G. S.; Kamiya, T.; Schwede, S.; Willard, D. A. (2003). "Medieval Warm Period, Little Ice Age, and 20th Century Climate Variability from Chesapeake Bay". Global and Planetary Change 36 (1–2): 17–29. Bibcode:2003GPC....36...17C. doi:10.1016/S0921-8181(02)00161-3. ^ Jump up to: a b c Reiter P (2000). "From Shakespeare to Defoe: malaria in England in the Little Ice Age". Emerging Infect. Dis. 6 (1): 1–11. doi:10.3201/eid0601.000101. PMC 2627969. PubMed. Jump up ^ Kam-biu Liu; Caiming Shen; Kin-sheun Louie (2001). "A 1,000-Year History of Typhoon Landfalls in Guangdong, Southern China, Reconstructed from Chinese Historical Documentary Records". Annals of the Association of American Geographers 91 (3): 453–464. doi:10.1111/0004-5608.00253. Jump up ^ Kenyon W.A., Turnbull J.R. (1971). The Battle for James Bay. Toronto: Macmillan Company of Canada Limited. Jump up ^ Whitehouse, David (2003-12-17). "Stradivarius' sound 'due to Sun'". BBC. Jump up ^ TV series "Connections" by James Burke ^ Jump up to: a b c Template:Harvn Jump up ^ Behringer, Wolfgang (1999-09-01). "Climatic Change and Witch-hunting: the Impact of the Little Ice Age on Mentalities". Climatic Change (Springer Netherlands) 43 (1): 335–351. doi:10.1023/A:1005554519604. ^ Jump up to: a b c Macdougall, Douglas (2004). Frozen Earth: The Once and Future Story of Ice Ages. University of California Press. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-24824-4. ^ Jump up to: a b Earth Environments: Past, Present and Future, by David Huddart & Tim Stott, p. 863 (quoted), 2010, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470749601, 9780470749609 Jump up ^ Earth Environments: Past, Present and Future, by David Huddart & Tim Stott, p. 863 (quoted), 2010, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470749601, 9780470749609; see also this 1980 article by Burroughs in the New Scientist Jump up ^ John E. Thornes, John Constable (1999). John Constable's skies: a fusion of art and science. Continuum International. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-902459-02-4. Jump up ^ "Kilsyth Curling". Retrieved 2010-09-11. Jump up ^ "The Story so Far !!!". Gourock Curling Club. 2009. Retrieved 2010-09-11. Jump up ^ David A. Hodella, Mark Brennera, Jason H. Curtisa, Roger Medina-Gonzálezb, Enrique Ildefonso-Chan Canb, Alma Albornaz-Patb, Thomas P. Guilderson (March 2005). "Climate change on the Yucatan Peninsula during the Little Ice Age". Quaternary Research 63 (2): 109. Bibcode:2005QuRes..63..109H. doi:10.1016/j.yqres.2004.11.004. Unknown parameter |urlold= ignored (help) Jump up ^ Johnson, T.C., Barry, S., Chan, Y., Wilkinson, P. (2001). "Decadal record of climate variability spanning the past 700 yr in the Southern Tropics of East Africa". Geology 29: 83–6. Bibcode:2001Geo....29...83J. doi:10.1130/0091-7613(2001)029<0083:DROCVS>2.0.CO;2. ISSN 0091-7613. Jump up ^ Holmgren, K., Tyson, P.D., Moberg, A., Svanered, O. (2001). "A preliminary 3000-year regional temperature reconstruction for South Africa". South African Journal of Science 97: 49–51. Jump up ^ Kreutz, K.J., Mayewski, P.A., Meeker, L.D., Twickler, M.S., Whitlow, S.I., Pittalwala, I.I. (1997). "Bipolar changes in atmospheric circulation during the Little Ice Age". Science 277 (5330): 1294–96. doi:10.1126/science.277.5330.1294. Jump up ^ Khim, B.-K.; Yoon H. I.; Kang C. Y.; Bahk J. J. (November 2002). "Unstable Climate Oscillations during the Late Holocene in the Eastern Bransfield Basin, Antarctic Peninsula". Quaternary Research 58 (3): 234–245. Bibcode:2002QuRes..58..234K. doi:10.1006/qres.2002.2371. Jump up ^ http://waiscores.dri.edu/MajorFindings/MayewskiRes.html பரணிடப்பட்டது 2006-04-05 at the வந்தவழி இயந்திரம் Jump up ^ http://igloo.gsfc.nasa.gov/wais/pastmeetings/abstracts00/Das.htm பரணிடப்பட்டது 2006-10-07 at the வந்தவழி இயந்திரம் Jump up ^ D.M. Etheridge, L.P. Steele, R.L. Langenfelds, R.J. Francey, J.-M. Barnola, V.I. Morgan. "Historical CO2 Records from the Law Dome DE08, DE08-2, and DSS Ice Cores". Carbon Dioxide Information Analysis Center. Oak Ridge National Laboratory, U.S. Department of Energy, Oak Ridge, Tenn. Jump up ^ M. Angeles Bárcena, Rainer Gersonde, Santiago Ledesma, Joan Fabrés, Antonio M. Calafat, Miquel Canals, F. Javier Sierro, Jose A. Flores (1998). "Record of Holocene glacial oscillations in Bransfield Basin as revealed by siliceous microfossil assemblages". Antarctic Science 10 (3): 269–85. doi:10.1017/S0954102098000364. Jump up ^ Rhodes et al: "Little Ice Age climate and oceanic conditions of the Ross Sea, Antarctica from a coastal ice core record". Clim. Past, 8, 1223–1238, 2012. Jump up ^ Erica J. Hendy, Michael K. Gagan, Chantal A. Alibert, Malcolm T. McCulloch, Janice M. Lough, Peter J. Isdale (22 February 2002). "Abrupt Decrease in Tropical Pacific Sea Surface Salinity at End of Little Ice Age". Science 295 (5559): 1511–4. Bibcode:2002Sci...295.1511H. doi:10.1126/science.1067693. PubMed. Jump up ^ Pollack, H. N., Huang, S., Smerdon, J. E. (2006). "Five centuries of climate change in Australia: the view from underground". J. Quaternary Sci. 21 (7): 701–6. Bibcode:2006JQS....21..701P. doi:10.1002/jqs.1060. Jump up ^ Nunn, P.D. (2000). "Environmental catastrophe in the Pacific Islands around AD 1300". Geoarchaeology 15 (7): 715–40. doi:10.1002/1520-6548(200010)15:7<715::AID-GEA4>3.0.CO;2-L. Jump up ^ Winkler, Stefan (2000). "The 'Little Ice Age' maximum in the Southern Alps, New Zealand: preliminary results at Mueller Glacier". The Holocene 10 (5): 643–647. doi:10.1191/095968300666087656. Retrieved 2010-06-27. Jump up ^ Villalba, R. (1990). "Climatic fluctuations in Northern Patagonian during the last 1000 years as inferred from tree-rings records". Quaternary Research 34 (3): 346–60. Bibcode:1990QuRes..34..346V. doi:10.1016/0033-5894(90)90046-N. Jump up ^ Villalba, R (1994). "Tree-ring and glacial evidence for the medieval warm epoch and the Little Ice Age in southern South America". Climatic Change 26 (2–3): 183–97. doi:10.1007/BF01092413. Jump up ^ Sébastien Bertranda, Xavier Boësa, Julie Castiauxa, François Charletb, Roberto Urrutiac, Cristian Espinozac, Gilles Lepointd, Bernard Charliere, Nathalie Fage (2005). "Temporal evolution of sediment supply in Lago Puyehue (Southern Chile) during the last 600 yr and its climatic significance". Quaternary Research 64 (2): 163. Bibcode:2005QuRes..64..163B. doi:10.1016/j.yqres.2005.06.005. Jump up ^ Inka Meyer, Sebastian Wagner. "The Little Ice Age in Southern South America: Proxy and Model Based Evidence". Springer Netherlands. Retrieved 2010-02-09. Jump up ^ Thompson, L.G., Mosley-Thompson, E., Davis, M.E., Lin, P.-N., Henderson, K. and Mashiotta, T.A. 2003. Tropical glacier and ice core evidence of climate change on annual to millennial time scales. Climatic Change 59: 137-155. ^ Jump up to: a b Araneda, A., F. Torrejón, M. Aguayo, L. Torres, F. Cruces, M. Cisternas, R. Urrutia (2007). "Historical records of San Rafael glacier advances (North Patagonian Icefield): another clue to 'Little Ice Age' timing in southern Chile?". The Holocene 17 (7): 987–98. doi:10.1177/0959683607082414. Jump up ^ Bond et al., 1997 Jump up ^ "Abrupt Climate Changes Revisited: How Serious and How Likely?". USGCRP Seminar. US Global Change Research Program. 23 February 1998. ^ Jump up to: a b http://www.nature.com/ncomms/journal/v3/n6/full/ncomms1901.html, Wanamaker et al. (2012). Surface changes in the North Atlantic meridional overturning circulation during the last millennium ^ Jump up to: a b Kaufman, D. S.; Schneider, D. P.; McKay, N. P.; Ammann, C. M.; Bradley, R. S.; Briffa, K. R.; Miller, G. H.; Otto-Bliesner, B. L.; Overpeck, J. T.; Vinther, B. M.; Abbott, M.; Axford, M.; Bird, Y.; Birks, B.; Bjune, H. J. B.; Briner, A. E.; Cook, J.; Chipman, T.; Francus, M.; Gajewski, P.; Geirsdottir, K.; Hu, A.; Kutchko, F. S.; Lamoureux, B.; Loso, S.; MacDonald, M.; Peros, G.; Porinchu, M.; Schiff, D.; Seppa, C.; Seppa, H.; Arctic Lakes 2k Project Members (2009). "Recent Warming Reverses Long-Term Arctic Cooling". Science 325 (5945): 1236–1239. doi:10.1126/science.1173983. PubMed. edit "Arctic Warming Overtakes 2,000 Years of Natural Cooling". UCAR. September 3, 2009. Retrieved 19 May 2011. Bello, David (September 4, 2009). "Global Warming Reverses Long-Term Arctic Cooling". Scientific American. Retrieved 19 May 2011. Jump up ^ Radiative Forcing of Climate Change: Expanding the Concept and Addressing Uncertainties, National Research Council, National Academy Press, Washington, D.C., p. 29, 2005. Jump up ^ Sunspot Activity at 8,000-Year High Space.com Astronomy October 27, 2004 Jump up ^ Geoffrey Parker, Lesley M. Smith (1997). The general crisis of the seventeenth century. Routledge. pp. 287, 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-16518-1. Jump up ^ Crowley, Thomas J. (2000-07-14). "Causes of Climate Change Over the Past 1000 Years". Science 289 (5477): 270–7. Bibcode:2000Sci...289..270C. doi:10.1126/science.289.5477.270. PubMed. Jump up ^ Robock, Alan (1979-12-21). "The "Little Ice Age": Northern Hemisphere Average Observations and Model Calculations". Science 206 (4425): 1402–4. Bibcode:1979Sci...206.1402R. doi:10.1126/science.206.4425.1402. PubMed. Jump up ^ "A Chilling Possibility - NASA Science". Science.nasa.gov. Retrieved 2013-06-24. Jump up ^ Hopkin, Michael (November 29, 2006). "Gulf Stream weakened in 'Little Ice Age'". Nature News. Jump up ^ Villanueva, John Carl (2009-10-19). "Little Ice Age". Universe Today. Retrieved 2010-09-22. Jump up ^ Pittenger, Richard F.; Gagosian, Robert B. (October 2003). "Global Warming Could Have a Chilling Effect on the Military" (PDF). Defense Horizons (National Defense Univ Washington DC Center for Technology and National Security Policy) 33. Retrieved 2010-09-22. Jump up ^ Leake, Jonathan (2005-05-08). "Britain faces big chill as ocean current slows". The Times (London). Retrieved 2010-05-11. Jump up ^ "Hot Planet — Cold Comfort". Alan Alda in Scientific American Frontiers. Only a Little Ice Age. 16 February 2005. PBS. Jump up ^ Ravilious, Kate (2006-02-27). "Europe's chill linked to disease". BBC. Jump up ^ Ruddiman, William F. (2003). "The anthropogenic greenhouse era began thousands of years ago". Climatic Change 61 (3): 261–293. doi:10.1023/B:CLIM.0000004577.17928.fa. ^ Jump up to: a b "Evidence for the Postconquest Demographic Collapse of the Americas in Historical CO2 Levels". American Meteorological Society through Allenpress.com. 2006. Retrieved 2010-02-01. Jump up ^ R.J. Nevle et al., "Ecological-hydrological effects of reduced biomass burning in the neotropics after A.D. 1500," Geological Society of America Meeting, Minneapolis MN, October 11, 2011 . abstract. Popular summary: "Columbus' arrival linked to carbon dioxide drop: Depopulation of Americas may have cooled climate," Science News, November 5th, 2011. (access date 2-1-2012) Jump up ^ Bergeron, Louis (2008-12-17). "Reforestation helped trigger Little Ice Age, researchers say". Stanford News Service. ^ Jump up to: a b Melissa Free, Alan Robock (1999-08-27). "Global Warming in the Context of the Little Ice Age". Rutgers University, originally published in Journal of Geophysical Research. Retrieved 2010-01-03. Jump up ^ B. G. Hunt (2006-05-11). "The Medieval Warm Period, the Little Ice Age and simulated climatic variability (abstract)". Climate Dynamics, cited through Springer. Retrieved 2010-01-03.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_பனிக்கட்டிக்_காலம்&oldid=3244615" இலிருந்து மீள்விக்கப்பட்டது