சிறு மூளை புற்றுநோய்
சிறு மூளை புற்று நோய் (ஆங்கிலம் : Medulloblastoma) என்பது சிறுமூளையில் தோன்றும் புற்றுநோயாகும்.பொதுவாக குழந்தைகளிடம் அதிகம் தோன்றுகிறது.மூளையின் பிறபகுதிகளுக்கும் தண்டு வடத்திலும் பரவக்கூடும்.இந்நோய் தண்டுவத்ததினைச் சுற்றி உள்ள நீர்மத்தின் (CSF) வழியாக பரவுகிறது.உடலின் பிற பகுதிகளுக்கு அரிதாகவே பரவுகிறது. காரணம்-எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.ஆய்வுகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.[1][2][3]
அறிகுறிகள்
தொகுபுற்றின் அளவினையும் இடத்தினையும் பொருத்து அறிகுறிகள் அமையும்.தலைவலி, நிலையாக நிற்க முடியாமை,நடையில் தடுமாற்றம்,தளர்ச்சி,பார்வையில் சிக்கல்,செயல்பாட்டில் மாறுதல் இருக்கும்.முதல் அறிகுறி புற்றின் வளர்ச்சி காரணமாக அதிகரித்த அழுத்தத்தினால் ஏற்படும் தலை வலியாகும்.தண்டுவட நீர்மம் அதிகரிப்பதாலும் ஏற்படலாம்.இந்நீர்மம் மூளையினையும் தண்டுவடத்தினையும் அதிர்ச்சியிலிருந்து காக்கவே உள்ளது.காலைப் பொழுதில் வாந்தியும் இருக்கக்கூடும்.
சோதனைகள்
தொகுநரம்பு மண்டல ஆய்வுகள்,தொடு உணர்வு,மூளையின் செயல் பாட்டடினை அறிய சில கேள்விகள்,நினைவாற்றல் சோதனை, சி.டி, எம்.ஆர் ஐ.போன்ற படங்களின் துணையுடன் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.திசு பரிசோதனையும் முக்கியமாகும்.தண்டு வட நீர்மத்தினை ஊசிமூலம் எடுத்து அதில் புற்ற உயிரணுக்கள் உள்ளதை தெரிந்து கொள்ளமுடியும்.இவ்வாய்வு மயக்கநிலை மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவம்
தொகுஅறுவையும் கதிர் மருத்துவமும் முதன்மையானவை.வேதிமருத்துவமும் நல்ல பலனைக் கொடுக்கும்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Medulloblastoma". St. Jude Children's Research Hospital. பார்க்கப்பட்ட நாள் March 8, 2023.
- ↑ "Medulloblastoma Diagnosis and Treatment". National Cancer Institute. 17 September 2018. பார்க்கப்பட்ட நாள் March 8, 2023.
- ↑ Roussel MF, Hatten ME (2011). "Cerebellum". Cerebellum development and medulloblastoma. Current Topics in Developmental Biology. Vol. 94. pp. 235–82. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-0-12-380916-2.00008-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123809162. PMC 3213765. PMID 21295689.