சிறைகள் மற்றும் சீர்திருத்த நிர்வாக அகாதமி
சிறைகள் மற்றும் சீர்திருத்த நிர்வாக அகாதமி (Academy of Prison and Correctional Administration, சுருக்கமாக: APCA) தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள துறைப்பாடியில் அமைந்துள்ளது. இது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளின் நிதியுதவியுடன் நடைபெறும் சிறைகள் மற்றும் சீர்திருத்த நிர்வாக அதிகாரிகளுக்கான முதன்மையான பயிற்சி நிறுவனமாகும். இந்த அகாதமியில் பிராந்திய, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் மாநாடுகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்வதைத் தவிர பல்வேறு குறுகிய கால பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. இந்த அகாதமி மேலாண்மை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.
பயிற்சி
தொகுஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சிறைச்சாலை அதிகாரிகள், உளவியல் அலுவலர்கள், நல அலுவலர்கள் மற்றும் நன்னடத்தை அதிகாரிகளுக்கு 9 மாத பயிற்சி அளிக்கிறது.
நோக்கம்
தொகுசிறைச்சாலை மற்றும் சீர்திருத்த அதிகாரிகள் நேர்மை, அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் சீர்திருத்தம், மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் கைதிகளை மீண்டும் ஒருங்கிணைத்தல் ஆகிய இலக்குகளை அடைய பயிற்சி வழங்குதல்.
பணி
தொகுஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் பங்கேற்காத மாநிலங்களின் சிறை சீர்திருத்த அலுவலர்களுக்குத் திருத்த நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்களில் தரமான பயிற்சி அளித்தல்.
அடிப்படை படிப்புகள்
தொகுசிறை அதிகாரிகளுக்கான பயிற்சி
தொகுபுதிதாக தேர்வான சிறை அதிகாரிகளுக்கான அடிப்படைப் பயிற்சி ஒன்பது மாத காலம் ஆகும். இந்த பாடத்திட்டத்தின் நோக்கம், சிறைச்சாலைகளை தொழில் ரீதியாக நிர்வகிக்கக்கூடிய திறமையான சிறை அதிகாரிகளாக மாற்றுவதுதான். சீருடை அணிந்த ஒழுங்குமுறைப் படையின் உறுப்பினர்களாக ஆவதற்குத் தேவையான உடற்பயிற்சி வழங்கப்படுகிறது. .சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த நிர்வாகம் போன்ற செயல்பாட்டுத் திறன்களை இந்த அகாதமி ஊக்கிவிக்கிறது.
நன்னடத்தை அதிகாரிகளுக்கான பயிற்சி
தொகுசிறை நன்னடத்தை (தகுதிகாண்) அதிகாரிகளுக்கு மூன்று மாத பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதில் நன்னடத்தை அலுவலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தேவைப்படும் போது குற்றவாளிகள் சமூக மற்றும் மறுவாழ்வு சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய அவர்கள் முயற்சி செய்கிறார்கள். குற்றவாளிகளின் நன்னடத்தை சட்ட விதிகளின் கீழ், நன்னடத்தை (தகுதிகாண்) அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். தகுதிகாண் அதிகாரிகள் மற்றும் அவர்களின் மேற்பார்வையின் கீழ் உள்ள பிற நபர்களை கண்காணிக்க வேண்டும். இந்த 3-மாத கால அடிப்படைப் பயிற்சியில் தகுதிகாண் அலுவலரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளைச் சமாளிக்கத் தேவையான அறிவு, திறன் வளர்க்க உதவுகிறது.
உளவியலாளர்களுக்கான பயிற்சி
தொகுசிறை உளவியலாளர்களுக்கு வழங்கப்படும் 3-மாத அடிப்படை படிப்பானது, சிறை போன்ற கடினமான சூழலில் பணியாற்றுவதற்கு உளவியலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சித்தப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை சார்ந்த மனநலப் பிரச்சனைகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்குத் தேவையான தீர்வுகளை உளவியலாளர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் இந்தப் பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல அலுவலர்களுக்கான பயிற்சி
தொகுகைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சிறைக்கைதிகள் நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் சிறைவாசம் காரணமாக கைதிகள் அனுபவிக்கும் மன அழுத்தத்தையும் குறைக்கவும், சிறை சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவும், பல நலத்திட்டங்களை சிறை நல அலுவலர்கள் செயல்படுத்துகின்றனர். கைதிகளுக்கும், சிறை நிர்வாகத்திற்கும் இடையே பாலமாக செயல்படுகின்றனர். எனவே சிறைகளின் சுமூகமான நிர்வாகத்தில் நல அலுவலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிறை நல அலுவலர்களுக்குத் தேவையான திறன்கள், அறிவு மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றைச் சித்தப்படுத்த மூன்று மாத அடிப்படைப் பயிற்சி வழங்குறது.
ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கான பயிற்சிகள்
தொகுஅதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி
தொகுநேரடியாக பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளைத் தவிர, சில ஊழியர்கள் பதவி உயர்வு மூலம் சிறை அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் 3-மாத கால பயிற்சியில் அத்தகைய அதிகாரிகளுக்குத் தேவையான திறன்கள், அறிவு, தகுதி மற்றும் கடமைகளை செய்வதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.[1]
புதுப்பித்தல் பாடநெறி
தொகுபணிபுரியும் அனைத்து சிறை அதிகாரிகளுக்கு சீரான இடைவெளியில் ஒரு மாத கால புத்துணர்ச்சி படிப்பு வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் போது, அவர்களது சக நண்பர்களுடன் அனுபவத்தைப் பரிமாறிக்கொள்வதற்கும், பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகளை வழங்கும். சிறைத்துறையில் பல்வேறு பாடங்களில் சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ள, பணியாற்றும் அதிகாரிகளுக்கு இப்புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் வழங்கும். சிறை அலுவலர்களின் திறன்கள் கூர்மையாக இருப்பதையும், முந்தைய கற்றல் தக்கவைக்கப்படுவதையும் உறுதி செய்வதாகும்.
கணினி படிப்பு
தொகுஅகாதமியில் வெவ்வேறு கால அளவுகளில் (10 நாட்கள்/6 நாட்கள் போன்றவை) கணினி படிப்புகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக பணியில் இருக்கும் அதிகாரிகள் கணினிகளை கையாளும் பயிற்சி வழங்கப்படுகிறது.