சிற்றிஸென்டியம்
சிற்றிஸெண்டியம் திட்டமானது விக்கிப்பீடியாவை உருவாக்கியவர்களுள் ஒருவரான லாரி சாங்கரினால் செப்டம்பர் 15, 2006 அன்று முன்மொழியப் பட்டதிட்டமானது விக்கிப்பீடியாவின் ஓர் கிளைத் திட்டமாகும். இத்திட்டமானது மக்களால் (Citizen) சுருக்கமாக (Compendium) எடுத்துரைத்தல் என்ற பொருள்படும்
இத்திட்டத்தின் இயல்புகள்
தொகுCitizendium.org இன் கருத்துப் படி இது விக்கிப்பீடியாவின் ஓர் கிளைத்திட்டமாகவே ஆரம்பிக்கப்படும். குனூ கட்டற்ற அனுமதி மூலம் ஆங்கில விக்கிப்பீடியாவின் தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரை அல்லாது ஓவ்வொரு கட்டுரையும் சிற்றிஸெண்டியத்தில் சேமிக்கப் படும். எனினும் சிற்றிஸெண்டியம் குழு மின்னஞ்சலில் உள்ளவர்களின் கருத்துப் படி ஆங்கில் விக்கிப்பீடியாவில் அநேகமான கட்டுரைகள் கலைக்களஞ்சியத் தரத்தில் இல்லை எனவே எல்லாக கட்டுரைகளையும் இணைப்பது சிற்றிஸெண்டியதின் தரத்தைப் பாதிக்கும் என்று கருதுகின்றார்கள். காலப்போக்கில் சிற்றிஸெண்டியம் திட்டத்தில் மேம்படுத்தப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் இருந்து மேம்படுத்தப் படும்.
இந்தத திட்டத்தில் இலக்கானது துறைசார் வல்லுனர்களைப் பயன்படுத்தி புதிய சுருக்கமாக அறிவைப் பரப்புவதாகும். வல்லுனர்களின் வழிகாட்டல்களில் மக்கள் எழுதும் திட்டமே இதுவாகும். வல்லுனர்களின் கல்வித் தராதரங்கள் திறந்த முறைமூலமாகக் கண்டறியப் படும்.
முன்மொழியப் பட்ட கொள்கைகளும் கட்டமைப்புக்களும்
தொகுசிற்றிசெண்டியம் திட்டத்தில் எவரும் எதேச்சையாக எழுதமுடியாது.
பன்மொழிக் கலைக்களஞ்சியம்
தொகுஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் இந்தத் திட்ட்மானது பின்னர் ஏனைய மொழிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
கருத்துக்கள்
தொகுநியூபீடியா திட்டமும் வல்லுனர்களின் வழிகாட்டலில் இணையமூடான கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரிதாகக் கட்டுரைகள் ஏதும் இல்லாமல் தோல்வியில் இடைநிறுத்தப் பட்டது. இத்திட்டமும் நியூபிடியாக் கொள்கைகளை ஓரளவு கொண்டுள்ளதால் வெற்றிகொள்ளவது அவ்வளவு சுலபமான காரியம அல்லது. தவிர ஆங்கில மொழியிலேயே இன்னமும் இத்திட்டத்தில் கட்டுரைகள் இல்லை தமிழில் வருவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம் அல்லது தமிழில் வராமலும் போகலாம். இப்போதைக்கு விக்கிப்பீடியாவில் கவனம் செலுத்துவதே நல்லது.