சிலிகா இழைகள் (Silica fibers) சோடியம் சிலிகேட்டால் (நீர் கண்ணாடி) உருவாக்கப்படுகின்றன. இவை வெப்பத்தைத் தாங்க வல்ல பொருட்களாகவும், (கல்நாருக்கான பதிலியாகப் பயன்படுத்தப்படுதல் உள்ளிட்ட) மற்றும் சிப்பங்களிடுவதற்கும் ஈடுசெய்யும் கருவிகளிலும் பயன்படுகிறது. இவை  ஆல்கலி உலோகங்களல்லாத சேர்மங்களிலிருந்து போதுமான அளவு தனித்திருக்கும் வகையில் தயாரிக்கப்படலாம்.

இதன் தொடர்ச்சியாக சிலிக்கா இழைகள் உற்பத்திக்கு சோடியம் சிலிகேட்டு இழைகள் பயன்படுத்தப்படலாம். இது உருகிய நிலையில் உள்ள SiO2 கொண்ட கலவையிலிருந்து அல்லது கண்ணாடியிழைகளை அமிலத்தால் கரைத்தெடுத்தல் போன்ற முறைகளில் தயாரிக்கப்படுவதை விட சிறப்பானதாகும். ஈர வலைகள், வடிகட்டியின் விளிம்புகள் மற்றும் வலுவூட்டும் பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்க சிலிகா இழைகள் பயன்படுகிறது.

சிலிகா இழைகள், உலர் நூற்பு முறையில் சிலிசிக் அமில இழைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த இழைகள் உராய்வினைத் தவிர்க்க பயன்படும் பண்புகளைக் கொண்டிருப்பதால் உராய்வுப் பட்டை (friction-lining) தயாரிக்கப் பயன்படும் பொருட்களில் பயன்படுகின்றன.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Canadian Patent: CA 1142312, Application Number: 343548 Inventors: Hillermeier, Karlheinz (Germany), Seeberger, Ernst (Germany) Owners: AKZO N.V. (Netherlands)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிகா_இழை&oldid=2749166" இலிருந்து மீள்விக்கப்பட்டது