சிலிக்கன் மோனோசல்பைடு

வேதிச் சேர்மம்

சிலிக்கன் ஒருசல்பைடு (Silicon monosulfide) என்பது SiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்.சிலிக்கன் மற்றும் கந்தகம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. உயர் வெப்பநிலைகளில் உள்ள வாயுநிலையில் சிலிக்கன் ஒருசல்பைடு மூலக்கூறுகள் காணப்படுகின்றன.[1] வழக்கமான ஒற்றைப் பிணைப்புகளின் பிணைப்பு நீளம் 216 பைகோ மீட்டர் [1][2]என்ற அளவுடன் ஒப்பிடுகையில், வாயுநிலையில் உள்ள மூலக்கூறில் சிலிக்கன் கந்தகம் பிணைப்பு (Si-S) 192.93 பைகோ மீட்டர் நீளம் கொண்டுள்ளது. மற்றும் சிலிக்கன் – கந்தகம் இரட்டைப் பிணைப்பின் (Si=S) பிணைப்பு நீளம் 201 பைகோமீட்டர்[1] என்ற அளவைவிட குறைவாகவும் உள்ளது. வெளிறிய மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் உள்ள படிகவடிவமற்ற ஒரு திண்மநிலை சேர்மமாக வரலாற்றில் இது காணப்படுகிறது[3] . செருமானியத்தின் பண்புகளுடன் சிலிக்கனின் பண்புகள் வேறுபடுகின்றன. செருமானியம நிலைப்புத்தன்மை கொண்ட திண்மநிலை ஒருசல்பைடை உருவாக்குகிறது.

சிலிக்கன் மோனோசல்பைடு
இனங்காட்டிகள்
12504-41-5
பண்புகள்
SiS
வாய்ப்பாட்டு எடை 60.150 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  3. E. G. Rochow, E. W. Abel ,1973, The Chemistry of Germanium Tin and Lead, Pergamon Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-018854-0

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கன்_மோனோசல்பைடு&oldid=4174498" இலிருந்து மீள்விக்கப்பட்டது