சில்பா பிரபாகர் சதீஷ்

சில்பா பிரபாகர் சதீஷ், 2009 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது ஆட்சியர் மற்றும் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையைக் கொண்ட இவர் மே 2018 ஆம் ஆண்டில் முதன்முதலாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக தனது 3 வயது மகளை, இந்தியாவில் உள்ள கிராமப்புற குழந்தை பராமரிப்பு மையமான அங்கன்வாடியில் சேர்த்ததன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய இவர், தனது நிர்வாகப்பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், [1] [2] [3] [4] [5]

தற்போது தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து `முதல்வரின் முகவரி[6]’ என்ற புதிய துறையின் சிறப்பு அதிகாரியாக சில்பா பிரபாகர் சதீஷ் பணியாற்றிவருகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சில்பா பிரபாகர் சதீஷ், இந்தியாவின் கர்நாடகாவில் 30 ஆகஸ்ட் 1981 அன்று பிறந்துள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற இவர், 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வில் 46 வது இடத்தை பிடித்து, அரசு நிர்வாக அதிகாரியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

அரசு ஊழியராக

தொகு
  • 2010 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
  • 2011 முதல் 2014 வரை வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் உட்பிரிவுக்கு துணை ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
  • சென்னை மாநகராட்சியில் துணை ஆணையர் (கல்வி) ஓராண்டு பணியாற்றியுள்ளார்
  • தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக துணைத் தலைவராக, சென்னையில் பணிபுரிந்துள்ளார்.
  • மே 2018 முதல் நவம்பர் 2020 வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

தொகு
  • 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘நெகிழி தடையை திறம்பட அமல்படுத்துவதற்கான சிறப்பு விருதை’ அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இடமிருந்து  சென்னையில் சில்பா பிரபாகர் சதீஷ் பெற்றுள்ளார். [7]
  • 2019 ஆம் ஆண்டில் டிஜிட்டல் உருமாற்ற விருதைப் பெற்றுள்ளார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tirunelveli Collector Sets Precedent by Sending Daughter to Anganwadi Centre". News18 (9 January 2019). https://www.news18.com/news/india/tirunelveli-collector-sets-precedent-by-sending-daughter-to-anganwadi-centre-1997269.html. 
  2. "Tamil Nadu Collector Puts Daughter In Anganwadi, Not Private School". NDTV.com (9 January 2019). https://ndtv.com/tamil-nadu-news/tamil-nadu-collector-shilpa-prabhakar-satish-admits-daughter-in-anganwadi-over-private-schools-1975321. 
  3. "Tirunelveli collector skips Private school". www.thenewsminute.com (9 January 2019). https://www.thenewsminute.com/article/tirunelveli-collector-skips-private-playschools-admits-her-daughter-anganwadi-94755. 
  4. "Tamil Nadu collector wins hearts after choosing state-run Anganwadi centre over private school for daughter". www.timesnownews.com (10 January 2019). https://www.timesnownews.com/mirror-now/society/article/tamilnadu-collector-admits-daughter-to-state-run-anganwadi-centre-in-tirunelveli/344430. 
  5. "Water tank: Tirunelveli collector climbs atop water tank to check cleanliness". The Times of India (25 August 2018). https://timesofindia.indiatimes.com/city/madurai/tirunelveli-collector-climbs-atop-water-tank-to-check-cleanliness/articleshow/65536445.cms. 
  6. ""முதல்வரின் முகவரி" தமிழக அரசாணை வெளியீடு - சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்".
  7. "Collector receives award" (in en-IN). The Hindu. 13 June 2019. https://www.thehindu.com/news/cities/Madurai/collector-receives-award/article27901198.ece. 
  8. "Tirunelveli district admin bags digital transformation award 2019" (in en). The Times of India (7 November 2019). https://timesofindia.indiatimes.com/city/madurai/tirunelveli-district-admin-bags-digital-transformation-award-2019/articleshow/71946795.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்பா_பிரபாகர்_சதீஷ்&oldid=3685530" இலிருந்து மீள்விக்கப்பட்டது