சில்லெனைட்டு

சில்லெனைட்டு அல்லது சில்லினைட்டு (Sillénite or sillenite) என்பது Bi12SiO20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். இச்சேர்மத்தை சுவீடிய வேதியியலாளர் லார்சு கன்னார் சிலென் கண்டுபிடித்த காரணத்தால் அவர் பெயரே சூட்டப்பட்டது. பெரும்பாலும் இவர் பிசுமத் ஆக்சிசன் சேர்மங்கள் குறித்தே ஆய்வு செய்தார். இக்கனிமம் ஆத்திரேலியா, ஐரோப்பா, சீனா, யப்பான், மெக்சிகோ மற்றும் மொசாம்பிக் நாடுகளில் குறிப்பாக பிசுமுடைட்டுடன் காணப்பட்டது.[1][2][3]

சில்லெனைட்டு
Sillénite
செருமனியில் இருந்து சில்லெனைட்டு
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுBi12SiO20
இனங்காணல்
நிறம்ஆலிவ் பச்சை, சாம்பல் பச்சை, மஞ்சள் பச்சை, மஞ்சள், செம்பழுப்பு
படிக இயல்புகனசதுரப் படிகங்கள்
படிக அமைப்புகனசதுரம்
மோவின் அளவுகோல் வலிமை1–2
மிளிர்வுபல்வண்ணம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி9.16
ஒளியியல் பண்புகள்சமதிசை
ஒளிவிலகல் எண்>2.5
இரட்டை ஒளிவிலகல்இல்லை
கரைதிறன்ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரையும்
மேற்கோள்கள்[1][2][3]

சில்லெனைடின் கனசதுர படிக அமைப்பானது பிசுமத் சிலிக்கான் ஆக்சைடு , பிசுமத் தைட்டனேட்டு மற்றும் பிசுமத் செருமனேட்டு போன்ற பலவகையான பொருட்களால் ஆனதாகும்.[4]


மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sillénite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 Sillenite. Webmineral
  2. 2.0 2.1 Sillenite. Mindat
  3. 3.0 3.1 Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W. and Nichols, Monte C., தொகுப்பாசிரியர் (1995). "Sillenite" (PDF). Handbook of Mineralogy. II (Silica, Silicates). Chantilly, VA, US: Mineralogical Society of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0962209716. http://www.handbookofmineralogy.org/pdfs/sillenite.pdf. 
  4. Santos, D. J.; Barbosa, L. B.; Silva, R. S.; MacEdo, Z. S. (2013). "Fabrication and Electrical Characterization of Translucent Bi12TiiO20 Ceramics". Advances in Condensed Matter Physics 2013: 1. doi:10.1155/2013/536754. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லெனைட்டு&oldid=2223339" இலிருந்து மீள்விக்கப்பட்டது