சில்வா லெவி
சில்வா லெவி (Sylvain Lévi) ஒரு கீழைத்தேசவியலாளரும், இந்தியவியலாளரும் ஆவார்.[1] 1863 மார்ச் 28 ஆம் தேதி பாரிசில் பிறந்த இவரது தியேட்டர் இந்தியென் (Théâtre Indien) அத்துறையில் மிக முக்கியமான நூலாகும். மேற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தொக்காரிய எச்சங்களைப் பற்றியும் இவர் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.
சில்வா லெவி Silvain Lévi | |
---|---|
பிறப்பு | பாரிசு, பிரான்சு | மார்ச்சு 28, 1863
இறப்பு | அக்டோபர் 30, 1935 பாரிசு, பிரான்சு | (அகவை 72)
துறை | சமசுக்கிருத மொழி, இலக்கியம், பௌத்தம் |
பணியிடங்கள் | பிரான்சு கல்லூரி |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | பவுல் தெமியேவில், பவும் பெலியட் |
பழங்கால மனிதர்களுக்கு, நேரடியாகவே மூலாதார உண்மை உணர்த்தப்பட்டது என்ற கருத்தைக் கொண்ட "நிலைத்த மெய்யியல்'' என்னும் நம்பிக்கையைக் கொண்டிருந்த, மரபுவாத அறிஞரான ரெனே கினூவின்(René Guénon) தொடக்ககால எதிர்ப்பாளராக இவர் விளங்கினார்.
மேற்கோளகள்
தொகு- ↑ "Sylvain Levi (French orientalist)". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 13 July 2014.