சிவகங்கா அருவி
சிவகங்கா அருவி (Shivaganga Falls) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிர்சியிலிருந்து 37 கிமீ (23 மைல்) தொலைவில் அமைந்துள்ளது..[3] மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு ஒரு சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. கர்நாடகாவின் சிர்சி நகருக்கு அருகில் உள்ள பெட்டி நதி என்று அழைக்கப்படும் சால்மலி என்ற சிறிய நதி சிவகங்கா அருவியை உருவாக்குகிறது. அருவியை அடைய அடர்ந்த காடுகளுக்கு இடையே 1 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். மலையேற்றப் பாதை செங்குத்தானது மற்றும் சில இடங்களில் சற்று கடினமாக இருக்கும். நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சிறந்த நேரம் பருவமழைக்குப் பிந்தைய காலமான நவம்பர் - மார்ச் மாத காலமாகும். மழைக்காலத்தில், நீர்மட்டம் மிக அதிகமாக இருக்கும். நீர்வீழ்ச்சிக்கு அருகில் கணேசு பால் என்ற சிறிய தீவும் உள்ளது.[4][5]
சிவகங்கா அருவி Shivaganga Falls | |
---|---|
அமைவிடம் | சிவகங்கா அருவி வடகன்னட மாவட்டம், கருநாடகம் |
ஆள்கூறு | 14°47′50″N 74°45′25″E / 14.797218°N 74.756987°E |
ஏற்றம் | 348 m (1,142 அடி) |
மொத்த உயரம் | 74 m (243 அடி) [1][2] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | சால்மலி நதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shivaganga Falls, Sirsi". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
- ↑ "India.com Sirsi | Shivaganga Falls, The river falling from a height of 74m into a deep valley". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
- ↑ "Shivaganga sirsi - one india kannada". பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
- ↑ "Shivaganga Falls Near Sirsi - Kannada". Native planet (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
- ↑ "Uttara Kannada | Places To Visit In Uttara Kannada | Water Falls". Karnataka Tourism (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.